சேமாகத் அர்செல்

சேமாகத் அர்செல் (Semahat Sevim Arsel)(பிறப்பு 1928) என்பவர் துருக்கிய பில்லியனர் தொழிலதிபர். இவர் துருக்கியின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான கோஸ் ஹோல்டிங்கின் இயக்குநர் மற்றும் நிறுவனரான வெஹ்பி கோசு (1901-1996) இன் மூத்த மகளாவார். இவர் குடும்ப வணிகத்தில் 8.4% பங்கினை வைத்துள்ளார். ஆகத்து 2022 நிலவரப்படி, இவரது நிகர மதிப்பு US$1.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

சேமாகத் அர்செல்
பிறப்புசேமாகத் செவிம்
1928 (அகவை 95–96)
அங்காரா, துருக்கி
படித்த கல்வி நிறுவனங்கள்அமெரிக்கன் மகளிர் கல்லூரி
அறியப்படுவதுஇயக்குநர், கோக் கோல்டிங்
பெற்றோர்வெக்பி கோக்
சாத்பெர்க் கோக்[1]
வாழ்க்கைத்
துணை
நுசுரெத் அர்செல் (இறப்பு)

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அர்செல் 1928-ல் அங்காராவில் வெஹ்பி கோஸின் (1901-1996) மூத்த குழந்தையாகப் பிறந்தார்.[3][4]

அர்செல் இசுதான்புல்லில் உள்ள பெண்களுக்கான அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[5][6][7]

தொழில் தொகு

அர்சல் கோஸ் பல்கலைக்கழக செவிலியர் பள்ளியை நிறுவினார்.[6][7] ஆகத்து 2021 வரை, போர்ப்ஸ் நிகர மதிப்பு US$1.9 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது.[4] அர்செல் வெஹ்பி கோஸ் அறக்கட்டளையின் தலைவர் ஆவார்.[1][8]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அர்செல் கணவர் நுஸ்ரெட் அர்செல் சனவரி 2014-ல் இறந்தார்.[9] இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அர்செல் இசுதான்புல்லில் வசிக்கிறார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Anadolu Ajansı (13 July 2016). "Türkiye'nin 2015 yılı vergi rekortmeni Semahat Sevim Arsel". NTV. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  2. "Forbes profile: Semahat Sevim Arsel". Forbes. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
  3. "Türkiye'nin vergi rekortmenleri Koç ailesinden". Radikal. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  4. 4.0 4.1 4.2 "Semahat Sevim Arsel". Forbes. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  5. "Executive Profile* Semahat Sevim Arsel". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  6. 6.0 6.1 "Semahat". Reuters. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  7. 7.0 7.1 "Turkey's Koç Foundation Provides Global Model for Vocational Education | Synergos". www.synergos.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  8. "Board of Management". vkv.org.tr.
  9. "Koç Ailesi'ni Üzen Ölüm: Nusret Arsel Vefat Etti". haberler.com. January 18, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமாகத்_அர்செல்&oldid=3671990" இலிருந்து மீள்விக்கப்பட்டது