சேரந்தையப் புலவர்

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை எனும் ஊரில் வாழ்ந்த புலவர் சேரந்தையப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்றிற்கு மகிழ்ந்த அரசன் கட்டபொம்மன் இந்தப் புலவரின் சமுதாயத்தினருக்குச் சிறப்பளிக்கும் விதமாகத் தைப்பூசத் தினத்தன்று திருச்செந்தூர் முருகன் உற்சவச் சிலையினை சங்குமுகநாட்டு இல்லத்தார் சமுதாய மண்டபத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்து கொள்ள சிறப்பு அனுமதி அளித்ததாகக் கூறுகின்றனர். இந்த உரிமையின்படி இன்றும் திருச்செந்தூரில் தைப்பூசத் தினத்தன்று முருகன் உற்சவச் சிலை சங்குமுகநாட்டு இல்லத்தார் மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரந்தையப்_புலவர்&oldid=2717802" இலிருந்து மீள்விக்கப்பட்டது