சேரலர்
சேரநாட்டு மக்கள் சேரலர்.
சுள்ளியம் பேரியாறு பாய்ந்த சேர்ப்பு [1] நாடே நேரநாட்டின் தலைமைப் பகுதி. [2]
இதன் வேந்தன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ‘சேரலர் வேந்து’ எனப் பாராட்டப்படுகிறான். [3]
கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதன் ‘சேரலர் மருகன்’ எனப் பாராட்டப்படுகிறான். [4] மருகன் என்றால் மரபில் வந்தவன் என்பது பொருள்.
காரி ஓரியைக் கொன்று கொல்லி நாட்டைச் சேரலர்க்கு ஈந்தான். [5]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரில் உள்ள ‘சேரல்’ என்னும் பெயரே இவன் சேரலர் பெருமான் என்பதை விளக்குகிறது.