சைனாப் அங்காடி
சைனாப் அங்காடி (Zainab Market) என்பது பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் உள்ள ஒரு துணி கடையாகும். [1][2]
கட்டடம்
தொகுசைனாப் அங்காடி இதன் பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற மூன்று அடுக்கு வணிக கட்டடமாகும்.[3] தரை தளம் முதன்மையாக விற்பனையாளர்களுக்கானது. அடித்தளத்தில் சிறப்பு கடைகள் உள்ளன. முதல் தளத்தில் தோல் பொருட்கள் விற்கப்படுகின்றன.[3] சம்பிரதாய உடைகள், பாரம்பரிய நகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்ற பொருட்களின் வரிசையை சந்தை வழங்குகிறது.[3]
பிரித்தானிய இந்தியா காலத்தில் கட்டப்பட்ட சிக்கலறை போன்ற அமைப்பால் இக்கட்டடம் வகைப்படுத்தப்படுகிறது.[3][1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Zainab Market, Karachi". heritage.eftsindh.com.
- ↑ Hasan, Shazia (August 6, 2017). "Going ethnic". DAWN.COM.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Juman, Amber. "The Shopaholic's Paradise: Zainab Market Karachi". Youlin Magazine.
மேலும் வாசிக்க
தொகு- Salman, Peerzada (2015). Karachi Legacies of Empires