சையது முகம்மது தைபூர்
சையத் முகம்மது தைபூர் ( Syed Muhammed Taifoor ; 3 ஜூன் 1885 - 25 பிப்ரவரி 1972) வங்காளதேசத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும், பழங்கால ஆய்வாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.
சையது முகம்மது தைபூர் | |
---|---|
பிறப்பு | டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா | 3 சூன் 1885
இறப்பு | 25 பெப்ரவரி 1972 டாக்கா , வங்காளதேசம் | (அகவை 86)
தேசியம் | வங்காளதேசத்தவர் |
பிள்ளைகள் | லீலா அர்ஜுமந்த் பானு, லுலு பில்கிஸ் பானு மற்றும் மல்கா பர்வீன் பானு |
உறவினர்கள் | இப்ராகின் தேனிசுமந்த் (முன்னோர்) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதைபூர் 1885 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வங்காள மாநிலத்தின் டாக்காவில் ஒரு வங்காள முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சையத் அப்துல் அஜீஸ் அருகிலுள்ள சோனார்கானில் ஜமீந்தாராக இருந்தார். இவரது தந்தைவழி தாத்தா மிர் குலாம் முஸ்தபா அல்-உசைனி மூலம், இவர் 16 ஆம் நூற்றாண்டின் சுலாமிய அறிஞரும் ஜமீந்ருமான சையத் இப்ராகிம் தேனிசுமந்தின் வழித்தோன்றல் ஆவார். தைபூர் டாக்கா மற்றும் கொல்கத்தா நகரங்களில் உள்ள மதரசாக்களில் கல்வி பயின்றார். மேலும் வங்காளம், ஆங்கிலம், உருது மற்றும் பாரசீகம் ஆகிய மொழிகளில் சரளமாக தேர்ச்சி பெற்றார்.
தொழில்
தொகுதைபூர் 1909 இல் துணைப் பதிவாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். 1941 இல் பிரித்தானிய அரசால் கான் சாகிப் என்ற பட்டத்தைப் பெற்றார். கொல்கத்தா பதிவாளராக பணியாற்றிய பின்னர் 1942 இல் ஓய்வு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயர் எதிர்ப்பு இயக்கத்தின் போது, இவர் 1947 இல் கான் சாகிப் பட்டத்தைத் துறந்தார். ஈடன் மோகிலா கல்லூரி மற்றும் ஜெகந்நாத் கல்லூரியின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் டாக்காவில் உள்ள இடைநிலைக் கல்வி வாரியத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும், இவர் டாக்கா மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் டாக்கா அருங்காட்சியகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். இவர் டாக்கா அருங்காட்சியகத்திற்கு 200 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை வழங்கினார். பாக்கித்தானின் ஆசியச் சங்கத்திற்கு (இன்றைய வங்காளதேச ஆசியச்சங்கம் ) அரிய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை வழங்கினார். டாக்காவின் எழுத்துப்பிழையை மாற்றுவதை இவர் ஆதரித்தார். 1952 இல், நகரத்தின் வரலாற்று பரிணாம வளர்ச்சியில், "பழைய டாக்காவின் காட்சிகளை" வெளியிட்டார் [1] [2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதைபூர், சாரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு லீலா அர்ஜுமந்த் பானு, லுலு பில்கிஸ் பானு மற்றும் மல்கா பர்வீன் பானு என மூன்று மகள்கள் இருந்தனர்.
இறப்பு
தொகுதைபூர் 25 பிப்ரவரி 1972 அன்று டாக்காவில் இறந்தார்.