சையத் மோடி இரயில்வே விளையாட்டரங்கம்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள விளையாட்டரங்கம்

சையத் மோடி இரயில்வே விளையாட்டரங்கம் (Syed Modi Railway Stadium) இந்தியாவின் உத்தரபிரதேசத்திலுள்ள கோரக்பூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. 1982 ஆம் ஆண்டு விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிராக இரயில்வே துடுப்பாட்ட அணி இத்துடுப்பாட்ட அரங்கில் விளையாடியபோது இரண்டு இரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடந்தன.[1] 1983 ஆம் ஆண்டு ராசத்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இரயில்வே துடுப்பாட்ட அணி விளையாடியபோது மீண்டும் அரங்கம் பயன்படுத்தப்பட்டது[2]

சையத் மோடி இரயில்வே விளையாட்டரங்கம்
Syed Modi Railway Stadium
இரயில்வே விளையாட்டரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்கோரக்பூர், உத்தரப் பிரதேசம்
உருவாக்கம்1967
இருக்கைகள்n/a
அணித் தகவல்
இரயில்வே துடுப்பாட்ட அணி (1967-முதல்)
22 ஆகத்து 2015 இல் உள்ள தரவு
மூலம்: Ground profile

இந்த அரங்கம் இந்திய இரயில்வே துறையால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இக்காரணத்தினாலேயே இரயில்வே விளையாட்டரங்கம் என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் முன்னாள் இந்திய பூப்பந்து விளையாட்டு வீரர் சையத் மோடியின் நினைவாக அவர் பெயர் சூட்டப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. First-class cricket
  2. Scorecard
  3. "the 54th Railway Week prize distribution function held in the auditorium of Syed Modi Railway stadium,..." தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 April 2009. Archived from the original on 24 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 August 2009.

புற இணைப்புகள் தொகு