சைரசு (தரவுத்தளம்)

சைரசு (Scirus) என்பது 2001-இல் முதன்முதலில் தொடங்கப்பட்ட விரிவான அறிவியல் தேடல் பொறியாகும்.[1] இது சைட்சீரெக்சு(CiteSeerX) மற்றும் கூகுள் இசுகாலர் போன்று செயல்பட்டது. சைரசு அறிவியல் தகவல்களில் தனிக் கவனம் செலுத்தியது. சைட்சீரெக்சு போலல்லாமல், சைரசு ஆனது கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்காக மட்டும் அல்ல மேலும் அனைத்து முடிவுகளிலும் முழு உரை சேர்க்கப்படவில்லை. இது அறிவியல் தேடல் முடிவுகளை இசுகோபசுக்கு அனுப்பியது. இசுகோபசு என்பது உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி வெளியீட்டை உள்ளடக்கிய ஆய்வுச்சுருக்கம் மற்றும் மேற்கோள்களை உள்ளடக்கிய தரவுத்தளமாகும். சைரசின் உரிமையினை எல்செவியர் வெளியீட்டு நிறுவனம் கொண்டுள்ளது. 2013-இல், சைரசு முகப்புப் பக்கத்தில், வெளியிட்ட அறிவிப்பின் மூலம் 2014 முதல் இத்தளம் செயலிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சைரசு
Languagesஆங்கிலம்
Access
Providersஎல்செவியர்
Coverage
Disciplinesஉயிர் அறிவியல்; சமூக அறிவியல்; இயற் அறிவியல்; சுகாதார அறிவியல்
Temporal coverage2001-2014
Geospatial coverageஉலகம் முழுவதும்
No. of records167 மில்லியன் பக்கங்கள்
Links
Websitehttp://www.scirus.com

சைரசு முகப்புப்பக்கத்தில் காணப்படும் அறிவிப்பின்படி சேவையானது பிப்ரவரி 2014இற்குள் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. McKiernan, Gerry (2005). "E-profile: Scirus: For Scientific Information Only". Library Hi Tech News 22 (3): 18–25. doi:10.1108/07419050510601579. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரசு_(தரவுத்தளம்)&oldid=4015477" இலிருந்து மீள்விக்கப்பட்டது