இசுகோபசு
இசுகோபசு (Scopus) என்பது எல்செவியரின் ஆய்வு சுருக்கம் மற்றும் மேற்கோள் தரவுத்தளமாகும். இது 2004ல் தொடங்கப்பட்டது. இசுகோபசு ஏறக்குறைய 11,678 வெளியீட்டாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 36,377 தலைப்புகளை (22,794 செயலில் உள்ள தலைப்புகள் மற்றும் 13,583 செயலற்ற தலைப்புகள்) உள்ளடக்கியது. இவற்றில் 34,346 உயர் பாடத் துறைகளில் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்:வாழ்க்கை அறிவியல், சமூக அறிவியல், இயற்பியல் அறிவியல் மற்றும் சுகாதார அறிவியல். இது மூன்று வகையான ஆதாரங்களை உள்ளடக்கியது: புத்தகத் தொடர், ஆய்விதழ்கள் மற்றும் வர்த்தக ஆய்விதழ்கள். ஒவ்வொரு தலைப்பிற்கும் நான்கு வகையான எண் தர அளவீடுகளின்படி இசுகோபசு தரவுத்தளத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளும் ஒவ்வொரு ஆண்டும் போதுமான உயர் தரத்திற்காக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இவை எச் சுட்டெண், சைட்ஸ்கோர் (CiteScore), எஸ் ஜெ ஆர் (SCImago Journal Rank ) மற்றும் சினிப் (SNIP-ஆய்வுக் கட்டுரையின் இயல்பாக்கப்பட்ட தாக்க மூலம்). இசுகோபசில் உள்ள தேடல்கள் காப்புரிமை தரவுத்தளங்களின் தேடல்களையும் உள்ளடக்குகின்றன.[1]
Languages | ஆங்கிலம் |
---|---|
Access | |
Providers | எல்செவியர் |
Cost | சந்தா மூலம் |
Coverage | |
Disciplines | உயிர் அறிவியல், சமூக அறிவியல், இயற் அறிவியல், சுகாதார அறிவியல் |
Temporal coverage | 2004–முதல் |
Geospatial coverage | உலகம் முழுவதும் |
No. of records | 78 மில்லியன் |
Links | |
Website | https://www.scopus.com |
Title list(s) | https://www.scopus.com/sources |
கண்ணோட்டம்
தொகுஇசுகோபசு மற்றும் அறிவியல் வலையின் (WOS) எளிமையான பயன்பாடு மற்றும் செயல் எல்லையினை ஒப்பிடுகையில், 2006ஆம் ஆண்டு ஆய்வின்படி, "புதிய பயனருக்குகூட இசுகோபசு எளிதானது. ஒரு குறிப்பிட்ட மேற்கோளிலிருந்து முன்னோக்கி மற்றும் பின்தங்கிய நிலையில் தேடும் திறன் ஆராய்ச்சியாளருக்கு மிகவும் உதவியாக இருக்கும். பல்வகை அம்சம் ஆராய்ச்சியாளரைத் தனது பாடத்திற்கு வெளியே எளிதாகத் தேட அனுமதிக்கிறது. இசுகோபசைவிட அறிவியல் வலையின் நன்மை அதன் செயல் எல்லையாகும். அறிவியல் வலை தரவுத்தளம் 1945ஆம் ஆண்டிற்கும் இசுகோபசு தரவுத்தளம் 1966க்கும் செல்கிறது. இருப்பினும், இசுகோபசு மற்றும் அறிவியல் வலை ஒன்றையொன்று சார்ந்து தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. ஏனெனில் ”எந்தவொரு வளமும் அனைத்தையும் உள்ளடக்கியது அல்ல”.[2]
இசுகோபசு ஆசிரியர்களின் சுயவிவரங்களையும் வழங்குகிறது. இவை இணைப்புகள், வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நூலடைவு தரவு, குறிப்புகள் மற்றும் ஒவ்வொரு வெளியிடப்பட்ட ஆவணத்திற்கும் கிடைத்த மேற்கோள்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை உள்ளடக்கியது. இதில் எச்சரிக்கை அம்சங்களையும் கொண்டுள்ளது. இது பதிவுசெய்த பயனர்களை சுயவிவரத்தில் மாற்றங்களைக் கண்காணிக்க அனுமதிக்கிறது மற்றும் ஆசிரியர்களின் எச் சுட்டெண்னைக் (h-index) கணக்கிடும் வசதியைக் கொண்டுள்ளது. 2016ஆம் ஆண்டில், இசுகோபசு சைட்ஸ்கோர்[3] என்ற இலவச வலைத்தளத்தினை அறிமுகப்படுத்தியது. இது இசுகோபசில் உள்ள ஆய்விதழ்கள், மாநாட்டு நடவடிக்கைகள் மற்றும் புத்தகங்கள் போன்ற 25,000க்கும் மேற்பட்ட செயலில் உள்ள தலைப்புகளுக்கு மேற்கோள் தரவை தாக்கக் காரணிக்கு மாற்றாக வழங்குகிறது.
ஆய்விதழ் கட்டுரையாளர்களின் இச்கோபசு அடையாளங்காட்டியினை தனியுரிமையற்ற எண்ணிம அடையாளங்காட் ஆர்சிட் (ORCID) உடன் ஒருங்கிணைக்க முடியும்.[4]
2018ஆம் ஆண்டில், இசுகோபசு அன்பேவால் (Unpaywall) தரவைப் பயன்படுத்தித் படைப்புகளின் திறந்த அணுகல் நிலை குறித்த தகவல்களை உட்பொதிக்கத் தொடங்கியது.[5]
உள்ளடக்க தேர்வு மற்றும் ஆலோசனைக் குழு
தொகுஎல்செவியர் இசுகோபசின் உரிமையாளர் மற்றும் அறிவியல் ஆய்விதழ்களின் சர்வதேச வெளியீட்டாளர்களில் முக்கியமானவராக இருப்பதால், ஒரு சுயாதீனமான சர்வதேச இசுகோபசு உள்ளடக்கத் தேர்வு மற்றும் ஆலோசனைக் குழுவினை 2009இல் நிறுவியது. இதன் மூலம் தரவுத்தளம் மற்றும் வெளியீட்டாளரைப் பொருட்படுத்தாமல் திறந்த மற்றும் வெளிப்படையான உள்ளடக்கப் பாதுகாப்பு கொள்கையைப் பராமரித்தல் நோக்கமுடையது.[6] இந்த குழுவில் அறிவியலாளர்கள் மற்றும் துறைசார் நூலகர்கள் உள்ளனர். செப்டம்பர் 2019இல், இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு இசுகோபசு பட்டியலிலிருந்த 327 ஆய்விதழ்களை நிராகரித்தது.[7]
எஸ்சிஇமாகோ ஆய்விதழ் தரவரிசை
தொகுசிமகோ ஆய்விதழ் தரவரிசைப்படி, 2016இல் நேச்சர் (இதழ்) மிக உயர்ந்த எச் சுட்டெண்ணான 1011ஐக் கொண்டிருந்தது.[8] மருத்துவர்களுக்கான கேன்சர் ஆய்விதழ் (CA - A Cancer Journal for Clinicians) [9] மிக உயர்ந்த எஸ் ஜே ஆர் (39.285) கொண்டிருந்தது. இதன் மேற்கோள் புள்ளி (CiteScore) 2016ல் 89.23 ஆக இருந்தது. மொத்த வெளியிடப்பட்ட ஆவணங்கள், மேற்கோள் ஆவணங்கள், மேற்கோள்கள், சுய மேற்கோள்கள், ஒரு ஆவணத்திற்கான மேற்கோள்கள் மற்றும் எச் சுட்டெண் ஆகியவற்றின் அடிப்படையில் Scimagojr.com நாடுகளுக்கான தரவரிசையை வழங்குகிறது. இந்த வலைத்தளத்தின்படி, 2019ல், அமெரிக்கா எச் சுட்டெண் 2222வுடன் முதல் இடத்திலும், ஐக்கிய இராச்சியம் (1373) இரண்டாவது இடத்திலும் ஜெர்மனி (1203) மூன்றாவது இடத்திலும் இருந்தது.[10]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kulkarni, A. V.; Aziz, B.; Shams, I.; Busse, J. W. (2009). "Comparisons of Citations in Web of Science, Scopus, and Google Scholar for Articles Published in General Medical Journals". JAMA 302 (10): 1092–6. doi:10.1001/jama.2009.1307. பப்மெட்:19738094.
- ↑ Burnham, JF (2006). "Scopus database: A review". Biomedical Digital Libraries 3: 1. doi:10.1186/1742-5581-3-1. பப்மெட்:16522216.
- ↑ "Sources". Scopus.
- ↑ "Scopus2Orcid". Scopus. Archived from the original on 24 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 7 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Else, Holly (2018-08-15). "How Unpaywall is transforming open science". Nature 560 (7718): 290–291. doi:10.1038/d41586-018-05968-3. பப்மெட்:30111793. Bibcode: 2018Natur.560..290E. https://www.nature.com/articles/d41586-018-05968-3.
- ↑ "Scopus Content Overview: Content Policy and Selection". Scopus Info. Elsevier. பார்க்கப்பட்ட நாள் 2013-09-04.
- ↑ Sharma, Kritika (2019-09-18). "UGC says publishing paper in de-recognised journals will affect promotion & appointment". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
- ↑ "Nature". www.scimagojr.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-04.
- ↑ "CA - A Cancer Journal for Clinicians". www.scimagojr.com.
- ↑ "Scimago Journal & Country Rank".