இதழாய்வியல்

இதழாய்வியல் (Journalology) என்பது (வெளியீட்டு அறிவியல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கல்வி வெளியீட்டுச் செயல்முறையின் அனைத்து அம்சங்களையும் சார்ந்த அறிவார்ந்த முறையாகும்.[1][2] கல்வி/ஆராய்ச்சி வெளியீட்டில் சான்றுகள் சார்ந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் புலமைமிகு ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த இந்தத் துறை முயல்கிறது.[3] "ஜர்னலாஜி (இதழாய்வியல்)" என்ற வார்த்தையை பி.எம்.ஜே.யின் முன்னாள் தலைமை தொகுப்பாசிரியர் ஸ்டீபன் லாக் உருவாக்கியுள்ளார். இல்னோய் சிகாகோவில் 1989இல் நடைபெற்ற முதல் சகமதிப்பாய்வு கருத்தரங்கில், இதழாய்வியல் ஒரு தனித்துவமான துறையாக நிறுவப்பட்டதில் ஒரு முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது. அறிவியலில், குறிப்பாக மருந்தியக்கச் சோதனைகளில், முன் பதிவு செய்வதற்கு முன்வருவதில் பத்திரிகைத் துறை செல்வாக்கு செலுத்தியது. மருத்துவ சோதனை பதிவு இப்போது பெரும்பாலான நாடுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. சக மதிப்பாய்வு செயல்முறையைச் சீர்திருத்த ஆராய்ச்சியாளர்களும் பணியாற்றுகிறார்கள்.

வரலாறு

தொகு

ஆரம்பகால அறிவியல் ஆய்விதழ்கள் பதினேழாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. பெரும்பாலான ஆரம்ப ஆய்விதழ்கள் சக மதிப்பாய்வைப் பயன்படுத்தினாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மருத்துவ ஆய்விதழ்களில் சக மதிப்பாய்வு பொதுவான நடைமுறையாக மாறவில்லை.[4] அறிவார்ந்த வெளியீட்டுச் செயல்முறை (சக மதிப்பாய்வு உட்பட) அறிவியல் வழிமுறைகளால் எழவில்லை. மேலும் நம்பகத்தன்மை (நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை),[5] சீரான தரநிலைகள் இல்லாமை, மற்றும் செல்லுபடியாகும் தன்மை (நன்கு நிறுவப்பட்ட, செயல்திறன் மிக்கது) போன்ற சிக்கல்களால் அவதிப்படுகிறது.[6][7] ஆராய்ச்சி வெளியீட்டு நடைமுறையைச் சீர்திருத்துவதற்கான முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கவனத்தினைப் பெறத் தொடங்கின.[8] இதழியல் துறை 1989-இல் முறையாக நிறுவப்பட்டது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Galipeau, James; Moher, David; Campbell, Craig; Hendry, Paul; Cameron, D. William; Palepu, Anita; Hébert, Paul C. (March 2015). "A systematic review highlights a knowledge gap regarding the effectiveness of health-related training programs in journalology" (in en). Journal of Clinical Epidemiology 68 (3): 257–265. doi:10.1016/j.jclinepi.2014.09.024. பப்மெட்:25510373. 
  2. Wilson, Mitch; Moher, David (March 2019). "The Changing Landscape of Journalology in Medicine" (in en). Seminars in Nuclear Medicine 49 (2): 105–114. doi:10.1053/j.semnuclmed.2018.11.009. பப்மெட்:30819390. 
  3. Couzin-Frankel, Jennifer (18 September 2018). "'Journalologists' use scientific methods to study academic publishing. Is their work improving science?" (in en). Science. 
  4. Burnham, John C. (1990-03-09). "The Evolution of Editorial Peer Review" (in en). JAMA: The Journal of the American Medical Association 263 (10): 1323. doi:10.1001/jama.1990.03440100023003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0098-7484. 
  5. American Heritage Dictionary of the English Language. 5th ed. Boston: Houghton Mifflin Harcourt, 2020. https://ahdictionary.com/word/search.html?q=reliable ("reliable, adj. 1. Capable of being relied on; dependable ... 2. Yielding the same or compatible results in different clinical experiments or statistical trials.").
  6. Oxford English Dictionary (OED Online) (2nd ed.). Oxford, UK: Oxford University Press. 1989. validity, n. ... 2. The quality of being well-founded on fact, or established on sound principles, and thoroughly applicable to the case or circumstances; soundness and strength (of argument, proof, authority, etc.) ... 4. Value or worth; efficacy. Merging into sense 2, from which in some instances it is hardly distinguishable.
  7. Nederhof, A.J. (1988), "The Validity and Reliability of Evaluation of Scholarly Performance", Handbook of Quantitative Studies of Science and Technology (in ஆங்கிலம்), Elsevier, pp. 193–228, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-444-70537-2.50012-x, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-70537-2, பார்க்கப்பட்ட நாள் 15 September 2020
  8. Smith, J (3 October 1990). "Journalology--or what editors do.". BMJ : British Medical Journal 301 (6754): 756–759. doi:10.1136/bmj.301.6754.756. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-8138. பப்மெட்:2224255. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

ஆய்விகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதழாய்வியல்&oldid=3342915" இலிருந்து மீள்விக்கப்பட்டது