சைவ எல்லப்ப நாவலர்
சைவ எல்லப்ப நாவலர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர். எல் என்னும் சொல் வெளிச்சத்தைக் குறிக்கும். எல்லே இலக்கம் – தொல்காப்பியம் உரியியல் இதனால் எல்லப்பன் என்னும் பெயர் கதிரவனைக் குறிக்கும் பெயர் என்பதை உணரலாம்.
இவர் இயற்றிய புராண நூல்கள் ஆறு
- அருணாசல புராணம்
- திருவெண்காட்டுப் புராணம்
- செவ்வந்திப் புராணம்
- தீர்த்தகிரிப் புராணம்
- திருவிரிஞ்சைப் புராணம்
- திருச்செங்காட்டங்குடிப் புராணம்
இவர் இயற்றிய பிரபந்தங்கள் (சிற்றிலக்கியம்) எட்டு என்பர்.
- திருவருணை அந்தாதி
- திருவருணைக் கலம்பகம்
- திருவாரூர்க் கோவை
- திருவருணைக் கோவை
- செவ்வந்திக் கோவை
- திருவிரிஞ்சைக் கோவை
- திருவிரிஞ்சைக் கலம்பகம்
- திருப்பாலைப் பந்தல் உலா
இவற்றுள் முதல் மூன்றும் அச்சாகியுள்ளன. பின் ஐந்தும் கிடைக்கவில்லை.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005