சொக்கநாத கலித்துறை
சொக்கநாதக் கலித்துறை என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது. இந்த நூலில் 11 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன. மதுரைச் சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சொக்கநாதரைத் தனக்கு வேண்டியன தரும்படி இந்தப் பாடல்களில் புலவர் வேண்டுகிறார்.