சொத்தவிளை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை (Sothavilai Beach) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். நாகர்கோவிலுக்கு மிக அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகின்றது. இந்தக் கடற்கரை 4 கிமீ நீளத்துக்குப் பரந்துள்ளது.[1] அழகிய நீண்ட மணல் பரப்புடன் காட்சியளிக்கும் இக்கடற்கரையில் சிறு, சிறு குடில்கள் மூலம் தமிழக சுற்றுலாத் துறை அழகுப்படுத்தியுள்ளது. காட்சிக்கோபுரம், அழகிய புல்வெளிகள், சிறுவர் பூங்காக்கள் இக்கடற்கரையின் அருகில் அமைந்துள்ளன.

சொத்தவிளை கடற்கரை
நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரை
நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரை
நாடு இந்தியா
நாடுதமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி

இது தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றாகும். 2004 சுனாமி காலத்தில் மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[2]

சான்றுகள் தொகு

  1. "கன்னியாகுமரி: வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் அறிந்திராத பிரமிப்பூட்டும் சுற்றுலா தலங்கள்" (in ta). 2023-06-09. https://www.bbc.com/tamil/articles/cy640vg6p89o. 
  2. "சொத்தவிளை கடற்கரை". http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456265. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=சொத்தவிளை_கடற்கரை&oldid=3800781" இருந்து மீள்விக்கப்பட்டது