சொனோட்லைட்டு

இனோசிலிக்கேட்டு

சொனோட்லைட்டு (Xonotlite) என்பது Ca6Si6O17(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச் சரிவச்சில்-பட்டகத்தன்மை கொண்டு குறிப்பாக ஊசி போல இக்கனிமம் படிகமாகிறது. நிறமற்றதாக, சாம்பல் நிறம், வெளிர் சாம்பல் நிறம், எலுமிச்சை வெண்மை அல்லது இளமஞ்சள் நிறங்களில் செனோட்லைட்டு காணப்படுகிறது. பட்டுப் போன்ற பளபளப்பும் வெண் கீற்றும் உடைய இப்படிகத்தின் வழியாக ஒளி ஊடுறுவும். மோவின் அளவுகோலில் இக்கனிமத்தின் கடினத்தன்மை அளவு 6.5 ஆகும். 1886 இல் முதன்முதலில் கண்டறியப்பட்டு செனோட்லைட்டு விவரிக்கப்பட்டது. மெக்சிகோ நாட்டின் பியுப்ளா மாநிலத்திலுள்ள டெடிலா டி சொனோட்லாவில் கண்டறியப்பட்டதால் கனிமத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. செர்பன்டைன் வகை தீப்பாறைகளில் செனோட்லைட்டு காணப்படுகிறது.

சொனோட்லைட்டுXonotlite
சொனோட்லைட்டு கனிம்ம் ஆரச்சமச்சீர் இழை இனிசைட்டு கனிமத்துடன் இணைந்துள்ளது.
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுCa6Si6O17(OH)2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
இத்தாலியில் கிடைக்கும் சொனோட்லைட்டு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொனோட்லைட்டு&oldid=2675215" இலிருந்து மீள்விக்கப்பட்டது