சொராஸ்டர் என்பவர் ஓர் ஈரானியத் தீர்க்கத்தரிசி ஆவார். இவர் சொராஸ்டிரியம் எனப்படும் சமயத்தை நிறுவியவர். இவர் நிறுவிய இச்சமயம் 2500 ஆண்டுகளுக்கு மேல் நிலைபெற்று இன்றும் இயங்கி வருகிறது. சொராஸ்டிரியர்களின் திருமறையாகிய அவெஸ்தாவின் மிகத்தொன்மையான பகுதியாகிய ”கதஸ்” (Gathas) என்ற மறை நூலின் ஆசிரியரும் இவரேயாவார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

சொராதுஸ்டிரா என்பது இவரது இயற்பெயர். இவருடைய வாழ்க்கை பற்றிய வரலாறுகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இருப்பினும் தற்போதைய வடக்கு ஈரானில் கி.மு. 628 ஆம் ஆண்டில் இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது இளமைக்காலம் குறித்த செய்திகளும் கிடைக்கவில்லை.

சொராஸ்டிரா சமயம்

தொகு

இவர் தமது 40 ஆம் வயதில் தாம் உருவாக்கிய சமயத்தைப் பரப்பத் தொடங்கினார். முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்த போதிலும், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னனாக இருந்த விஷ்டாஸ்பா என்பவரைத் தன் சமயத்தை ஏற்க வைத்து வெற்றி கண்டார். இவரே பின்பு சொராஸ்டரின் பாதுகாவலராகவும் நண்பராகவும் இருந்துள்ளார். ஈரானிய மரபு வழிச்செய்தியின் படி சொராஸ்ர் 77 வயது வரை வாழ்ந்துள்ளார். அதன்படி இவர் கி.மு. 551 இல் இறந்ததாகக் கருதப்படுகிறது.

சொராஸ்டிரா சமயத்தின் தத்துவம்

தொகு

அத்வைதமும் துவைதமும் இணைந்த ஓரு கலவையாகச் சொராஸ்டிரா தத்துவம் அமைந்துள்ளது. சொராஸ்டிரர் போதனைப்படி இறைவன் ஒருவனே. அதனை அவர் ”அஹீரா மாஜ்டோ” என்று அழைக்கிறார். அதாவது “மெய்யறிவுப் பெருமான்“ என்று பொருள். இன்றைய ஈரானிய மொழியில் இதனை “ஒர்மஜ்டு“ என்று அழைக்கின்றனர். ஒரு தீய சக்தி இருப்பதாகவும சொராஸ்டிரியர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் “அங்ரா மைன்யு“ என்றழைக்கிறார்கள். இன்றைய ஈரானிய மொழியில் “அஹ்ரிமான்“ என்கின்றனர். இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.

உசாத்துணை

தொகு
  • மைக்கேல் ஹெச். ஹார்ட் எழுதிய புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொராஸ்டர்&oldid=3656804" இலிருந்து மீள்விக்கப்பட்டது