சொல் சுவர்
ஒரு சொல் சுவர் (word wall ) அல்லது வார்த்தைச் சுவர் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் (பொதுவாக அகரவரிசையில்) ஒரு வகுப்பறையின் சுவர், அறிவிப்புப் பலகை அல்லது பிற காட்சிப் பரப்பில் பெரிய அளவிலான எழுத்துக்களில் காட்டப்படும் சொற்களின் தொகுப்பைக் கொண்ட எழுத்தறிவுக் கருவியாகும்.இது மாணவர்கள் அல்லது பிறர் பயன்படுத்துவதற்கு ஒரு ஊடாடும் கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் எழுதும் போது மற்றும்/அல்லது படிக்கும் போது சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும்.
இது பொதுவாக வாசிப்பு/எழுதுதல் அறிவுறுத்தலுடன் தொடர்புடையது என்றாலும், ஒலிப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பது,புதிய சொற்களைக் கற்பது, புரிந்துகொள்ளுதல் திறன் வளர்த்தல், மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குவது, பள்ளி மற்றும் சுய வேலைகளை உருவாக்க உதவுவதாலும் அனைத்துப் பாடப் பகுதிகளுக்கும் வகுப்பறைகளில் வார்த்தைச் சுவர்கள் பயன்படுத்துவது பொதுவானதாகி வருகிறது.
இதன் நெகிழ்வான தன்மை மற்றும் மாணவர்களுடன் இணைந்து "வளரும்" திறன் காரணமாக, மழலைப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான வகுப்பறைகளில் வார்த்தைச் சுவர்களைப் பயன்படுத்தலாம்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட கலைப்பொருளாக இருப்பதால், வார்த்தைச் சுவர்கள் ஊடாடும் மற்றும் இணைந்து கற்கும் கருவிகளாகக் கருதப்படுகின்றன. தற்போது இதில் விளக்கப்படங்கள் மற்றும் வண்ண-குறியிடப்பட்ட பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. [1]
சான்றுகள்
தொகு- ↑ Thompson, Lynn (2004-10-27). "Schools Take Teens Back to 2 of the R's". The Seattle Times. http://seattletimes.nwsource.com/html/snohomishcountynews/2002073401_reading27n.html.