சோகா அசகாரா
சோகோ அசகாரா (Shoko Asahara) (பிறப்பு:மார்ச் 2, 1955 - சூலை 6, 2018), இவர் இந்து சமயம், பௌத்தம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் கலவையாக ஓம் சின்ரிக்யோ என்ற புதிய சமயத்தை ஜப்பானில் நிறுவியவர்.
சோகா அசகாரா | |
---|---|
பிறப்பு | சிசுவோ மட்சுமோட்டோ மார்ச்சு 2, 1955 யாதுசுசிரோ, குமாமோட்டோ நகரம், ஜப்பான் |
இறப்பு | சூலை 6, 2018 டோக்கியோ தடுப்பு நிலையம், டோக்கியோ, ஜப்பான் | (அகவை 63)
தீர்ப்பு(கள்) | மரண தண்டனை |
தற்போதைய நிலை | நிறைவேற்றப்பட்டது. |
தொழில் | வழிபாட்டுத் தலைவர், ஓம் சின்ரிகியா சமயம் |
துணைவர் | தொமொக்கோ மட்சுமோட்டோ[1] |
பிள்ளைகள் | 12 |
1995-ஆம் ஆண்டில் இவரது ஆலோசனையால் இவரைப் பின்பற்றுபவர்கள் தோக்கியோ சுரங்கத் தொடருந்தில் நச்சு வாயுக்களை செலுத்தி பொதுமக்களை கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இச்செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட சோகோ அசகாராவிற்கு நீதிமன்றம் சாகும் வரை 2004ல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இவரது மேல்முறையீடு தோல்வி அடைந்ததால் சோகோ அசகாராவிற்கு 6 சூலை 2018 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.[2][3][4]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசோகோ அசகாரா மார்ச் 2, 1955ல் ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில், ஏழ்மையான குடும்பத்தில் சிசுவோ மாட்சுமோட்டோவாகப் பிறந்தார்.[5][6] அவருக்குப் பிறப்பிலிருந்தே குழந்தைப் பருவத்தில் உள்ள கண் அழுத்த நோய் இருந்தது. இதனால் அவரது இடது கண்ணின் பார்வை முழுவதையும் இழந்து, சிறு வயதிலேயே வலது கண்ணில் பகுதியளவு குருடாக மாறியது. இதனால் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவர் 1977ல் பட்டம் பெற்றார் மற்றும் குத்தூசி மருத்துவம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் படிப்பிற்கு திரும்பினார். அவை ஜப்பானில் பார்வையற்றவர்களுக்கு பொதுவான தொழில்களாக இருந்தன. இவர் திருமணம் செய்து கொண்டு 6 குழந்தைகளுக்குத் தந்தையானார்.
1981ல் அசகாரா உரிமம் இல்லாமல் மருந்தகத்தைப் பயிற்சி செய்ததற்காகவும், கட்டுப்பாடற்ற முறையில் மருந்துகளை விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அதற்காக அவருக்கு ¥200,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவர் தனது ஓய்வு நேரத்தை சீன ஜோதிடம் மற்றும் தாவோயிசத்தில் தொடங்கி பல்வேறு மதக் கருத்துகளைப் படிப்பதற்காக அர்ப்பணித்தார்.
பின்னர் அசகாரா மேற்கத்திய யோகா, தியானம், பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றைப் பயிற்சி செய்தார்.[7][8][9]
ஓம் சின்ரிக்யோ
தொகு1984ம் ஆண்டில் அவர் தனது இயற் பெயரான சிசுவோ மாட்சுமோட்டோ என்பதிலிருந்து சோகோ அசகாரா என மாற்றிக்கொண்டார் மேலும் 1987ல் தனது குழுவிற்கு ஓம் சின்ரிக்யோ என்று பெயர் வைத்தார்.[5][10] டோக்கியோ பெருநகர அரசாங்கம் 1989ல் ஓம் சின்ரிக்யோவை ஒரு மத நிறுவனமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது.
இக்குழுவில் ஒரு துறவற அமைப்பை நிறுவினார். மேலும் பல இல்லறத்தினர் இவரை பின்பற்றினர். அசஹாரா தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை அட்டைகளில் தோன்றுவதன் மூலம் நம்பகத்தன்மையைப் பெற்றார். அவர் படிப்படியாக விசுவாசிகளின் எண்ணிக்கையைப் பெற்றார் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரை-கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார். அசஹாரா பல மத புத்தகங்களையும் எழுதினார். இதில் பியாண்ட் லைஃப் அண்ட் டெத் மற்றும் சுப்ரீம் இனிஷியேஷன் ஆகியவை அடங்கும்.
ஓம் ஷின்ரிக்யோவின் கோட்பாடு வஜ்ரயான நூல்கள், விவிலியம் மற்றும் பிற நூல்களை அடிப்படையாகக் கொண்டது. 1992ம் ஆண்டில் அசஹாரா தன்னை இயேசு கிறிஸ்து என்று அறிவித்துக் கொண்டார். இவர் ஜப்பானின் ஒரே முழு ஞானம் பெற்ற மகான் என்றும், இயேசுவின் ஆட்டுக்குட்டியுடன் அடையாளம் காணப்பட்டார்.
மற்றவர்களின் பாவங்களைத் தன் மீது சுமந்து கொள்வதே இவரது நோக்கம் என்றார். மேலும் அவர் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஆன்மீக சக்தியை வழங்க முடியும் என்று கூறினார். யூதர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானிய அரச குடும்பம் மற்றும் போட்டியான ஜப்பானிய மதங்களின் இருண்ட சதிகளை அவர் எல்லா இடங்களிலும் கண்டார். இவர் மூன்றாம் உலகப் போரை உள்ளடக்கிய ஒரு இறுதித் தீர்ப்பு நாள் தீர்க்கதரிசனத்தை கோடிட்டுக் காட்டினார். மேலும் இறுதி மோதலை அணுசக்தி வெடிகுண்டால் முடிவடைந்ததை விவரித்தார்.
அசஹாரா அடிக்கடி "மனித நிவாரணத்திற்காக" அர்மகெதோனின் அவசியத்தை போதித்தார். அவர் இறுதியில், "மகாமுத்ராவின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தந்திர வஜ்ரயானத்தை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்" என்று அறிவித்தார். மேலும் அவர் சாதாரண விசுவாசிகளிடமிருந்து மறைக்கப்பட்ட ஒரு இரகசிய அமைப்பைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார்.[11]
டோக்கியோ சுரங்கப்பாதை நச்சுவாயு தாக்குதல் மற்றும் கைது
தொகுமார்ச் 20, 1995 அன்று, ஓம் ஷின்ரிக்கியோவின் உறுப்பினர்கள் டோக்கியோ சுரங்கப்பாதை தொடருந்தில் நரம்பு மண்டலத்தை தாக்கி அழிக்கும் நச்சு வாயு செலுத்தி பொதுமக்களை தாக்கினர். இதில் பதின்மூன்று பேர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மோசமான பாதிப்புகளை சந்தித்தனர். போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்த பிறகு, காவல் அதிகாரிகள் அசஹாராவின் சமய அமைப்பான ஓம் ஷின்ரிக்கியோ உறுப்பினர்கள் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டினர். அசாகராவின் பல சீடர்கள் கைது செய்யப்பட்டனர். ஓம் ஷின்ரிக்கியோ கட்டிடத்தில் சோதனையிடப்பட்டனர். மேலும் அசஹாராவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.[12][13] அடுத்த சில மாதங்களில், ஜப்பானிய மக்களிடையே புதிய மதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் முழு சமூகத்திற்கும் ஒரு அபாயகரமானதாகக் கருதும் பொதுவான அணுகுமுறை பரவியது.
மே 16, 1995 அன்று காவல் துறையினர் ஓம் ஷின்ரிக்யோவின் தலைமை அலுவலகத்தில், அசஹாரா மிகவும் சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டார்.[14]
விசாரணை மற்றும் மரணதண்டனை
தொகுஅசஹாரா 13 தனித்தனி குற்றச்சாட்டுகளில் 27 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.[15] The prosecution argued that Asahara gave orders to attack the Tokyo Subway to "overthrow the government and install himself in the position of Emperor of Japan".[16] டோக்கியோ சுரங்கப்பாதையைத் தாக்க அசஹாரா "அரசாங்கத்தைக் கவிழ்த்து ஜப்பான் பேரரசர் பதவியில் அமர்த்திக் கொள்ள" உத்தரவு பிறப்பித்ததாக அரசுத் தரப்பு வாதிட்டது. பின்னர், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையின் போது, தாக்குதல்கள் ஒழுங்காக இருந்தன என்ற கூடுதல் கோட்பாட்டை அரசுத் தரப்பு முன்வைத்தது. அசாகரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 6 பேருக்கு நீதிமன்றம் 6 சூலை 2018 அன்று தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.[3][4][17] Relatives of victims said they approved the execution.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Japanese Aum Shinrikyo Cult Leader Shoko Asahara Executed". The Inquisitr. July 6, 2018. https://www.inquisitr.com/4972454/japanese-aum-shinrikyo-cult-leader-shoko-asahara-executed.
- ↑ "Execution of Aum founder likely postponed". asiaone News. The Yomiuri Shimbun/Asia News Network. June 5, 2012. Archived from the original on February 23, 2014.
- ↑ 3.0 3.1 "Aum Shinrikyo: Japan executes cult leader Shoko Asahara". BBC News. July 6, 2018.
- ↑ 4.0 4.1 "Aum Shinrikyo guru Shoko Asahara hanged for mass murder: reports". The Japan Times. July 6, 2018.
- ↑ 5.0 5.1 "Key events related to Aum Shinrikyo cult" (in en-US). The Japan Times Online. July 6, 2018 இம் மூலத்தில் இருந்து ஜூலை 8, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180708012250/https://www.japantimes.co.jp/news/2018/07/06/national/crime-legal/key-events-related-aum-shinrikyo-cult/.
- ↑ Atkins, Stephen E. (2004). Encyclopedia of Modern Worldwide Extremists and Extremist Groups. Greenwood Publishing Group. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-32485-7.
- ↑ Wudunn, Nicholas D. Kristof With Sheryl (March 26, 1995). "A Guru's Journey -- A special report.; The Seer Among the Blind: Japanese Sect Leader's Rise". The New York Times. https://www.nytimes.com/1995/03/26/world/guru-s-journey-special-report-seer-among-blind-japanese-sect-leader-s-rise.html.
- ↑ "Shoko Asahara". Biography. Archived from the original on July 6, 2018. பார்க்கப்பட்ட நாள் July 6, 2018.
- ↑ "Shoko Asahara: From poor upbringing to cult leader". The Japan Times Online. July 6, 2018 இம் மூலத்தில் இருந்து ஜூலை 6, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180706081139/https://www.japantimes.co.jp/news/2018/07/06/national/crime-legal/executed-aum-leader-shoko-asahara/.
- ↑ Metraux, Daniel A. (1995). "Religious Terrorism in Japan: The Fatal Appeal of Aum Shinrikyo". Asian Survey 35 (12): 1147. doi:10.2307/2645835. https://archive.org/details/sim_asian-survey_1995-12_35_12/page/1147.
- ↑ Senate Government Affairs Permanent Subcommittee on Investigations (October 31, 1995). "III. Background of the Cult". Global Proliferation of Weapons of Mass Destruction: A Case Study on the Aum Shinrikyo.
- ↑ Kristof, Nicholas D. (April 20, 1995). "Japan Arrests No. 2 Leader of Sect Linked to Tokyo Attack". The New York Times. https://www.nytimes.com/1995/04/20/world/japan-arrests-no-2-leader-of-sect-linked-to-tokyo-attack.html.
- ↑ WATANABE, TERESA (May 16, 1995). "Japanese Guru Arrested in Fatal Subway Attack: Crime: Shoko Asahara found during raid on cult's Mt. Fuji compound. Warrant is first to link sect to poisoning". Los Angeles Times. http://articles.latimes.com/1995-05-16/news/mn-2520_1_shoko-asahara.
- ↑ Alfred, Charlotte (March 20, 2015). "20 Years Ago, A Shadowy Cult Poisoned The Tokyo Subway". Huffington Post. https://www.huffingtonpost.com/2015/03/20/tokyo-subway-sarin-attack_n_6896754.html.
- ↑ Ronczkowski, Michael R. (September 1, 2017). Terrorism and Organized Hate Crime: Intelligence Gathering, Analysis and Investigations, Fourth Edition (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781351787123.
- ↑ Ryall, Julian (January 16, 2014). "Justice looms for doomsday cult that brought death to the Tokyo subway". The Daily Telegraph: p. 14. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/japan/10576071/Justice-looms-for-Doomsday-cult-that-brought-death-to-Tokyo-subway.html.
- ↑ Ramzy, Austin (July 5, 2018). "Japan Executes Cult Leader Behind 1995 Sarin Gas Subway Attack". The New York Times. https://www.nytimes.com/2018/07/05/world/asia/japan-cult-execute-sarin.html.
- ↑ Sturmer, Jake (July 6, 2018). "Japan's doomsday cult leader behind gas attack is executed". ABC News. http://www.abc.net.au/news/2018-07-06/leader-of-japan-doomsday-cult-involved-in-sarin-attack-executed/9947904.
மேலும் படிக்க
தொகு- Asahara, Shoko (1988). Supreme Initiation: An Empirical Spiritual Science for the Supreme Truth. AUM USA Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-945638-00-0.—highlights the main stages of Yogic and Buddhist practice, comparing Yoga-sutra system by Patanjali and the Eightfold Noble Path from Buddhist tradition.
- Asahara, Shoko (1993). Life and Death. Shizuoka: Aum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 4-87142-072-8.—focuses on the process of Kundalini-Yoga, one of the stages in Aum's practice.
- Beckford, James A. (1998). "A Poisonous Cocktail? Aum Shinrikyo's Path to Violence". Nova Religio 1 (2): 305–6. doi:10.1525/nr.1998.1.2.305. http://urn.kb.se/resolve?urn=urn:nbn:se:norden:org:diva-4296.
- Berson, Tom (September 22, 1997). "Are We Ready for Chemical Warfare?". News World Communications.
- Brackett, D. W. (1996). Holy Terror: Armageddon in Tokyo. Weatherhill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8348-0353-4.
- Kiyoyasu, Kitabatake (September 1, 1995). "Aum Shinrikyo: Society Begets an Aberration". Japan Quarterly 42 (4): 376. https://www.proquest.com/openview/1c372bd859bec16b5fd2113812dc8dc3/1?pq-origsite=gscholar. பார்த்த நாள்: September 27, 2016.
- Murakami, Haruki; Birnbaum, Alfred; Gabriel, Philip (2001). Underground (1st ed.). New York: Vintage International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-72580-7.
வெளி இணைப்புகள்
தொகு- ஜப்பானின் ஏசு கிறிஸ்துவின் ரத்த கதை
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் A, a documentary film about Asahara made in 1998 by Tatsuya Mori
- A Japan Times article பரணிடப்பட்டது நவம்பர் 28, 2005 at the வந்தவழி இயந்திரம் about two documentary films on Aleph
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் A2, a follow-up documentary made in 2001, also by Mori
- BBC profile of Asahara