சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (Soka Ikeda College of Arts and Science for Women, Chennai, Tamil Nadu, India) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும்.[1] வாழ்வியல் விழுமியங்கள் என்ற பொருள்படும் “சோகா” என்ற ஜப்பானியச் சொல்லோடு “இகெதா” என்ற ஜப்பானிய தத்துவஞானியின் பெயரினை இணைத்துப் பெயரிடப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 2000ஆம் ஆண்டில் கல்லூரி தொடங்கப்பெற்றது.
வரலாறு
தொகுஉலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்ற சேது பாஸ்கரா கல்விக் குழுமத்தின் தாளாளரும் கல்வியாளருமான டாக்டர் சேது குமணன் அவர்கள், பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டவர். காந்திய நெறியில் உலக அமைதியைப் போற்றும் டாக்டர் தைசாகு இகெதாவின் ‘அன்னை’ என்ற கவிதையின் ஈர்ப்பால் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். 2000ஆம் ஆண்டில் 70 மாணவியருடன் தொடங்கப்பெற்ற கல்லூரி தற்போது 2000 மாணவியருடன், பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான ஏணிப்படியாகத் தன்னுடையப் பணியினைச் செவ்வனே செய்து வரும் கல்லூரி, இந்தியக் காந்தியக் கல்விக் குழுமத்தின் சிறந்த கல்வி நிறுவன விருதைப் பெற்றது. 2009ஆம் ஆண்டில் ஜப்பான் சோகா பல்கலைக்கழத்துடன் இணைந்து கல்விப் பரிமாற்றம் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு ஆண்டுதோறும் இரண்டு மாணவியர் ஜப்பானுக்குச் சென்று சோகா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். அங்கிருந்து இரண்டு ஜப்பானிய மாணவியர் கல்லூரியில் வந்து பயில்கின்றனர். 2019ஆம் ஆண்டு ISO 9001:2015 தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டில் வெள்ளிவிழாவினைக் கொண்டாடும் கல்லூரி, இந்த ஆண்டு, கல்லூரிகளுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவால் தரச்சான்றைப் பெற்றுள்ளது.[சான்று தேவை]
பாடப்பிரிவுகள்
தொகுபெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களுக்காக நடத்தப்பெறும் கல்லூரி சுழற்சி I மற்றும் சுழற்சி II என இரண்டு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் இளமறிவியல் பிரிவில் 15 பாடங்களும் முதுகலை மற்றும் முதுவறிவியல் பிரிவில் 7 பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அனைத்துத் துறையிலும் பட்டயக்கல்வியும் சான்றிதழ் கல்வியும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது.
இலச்சினை
தொகுகல்லூரியின் இலச்சினை எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என்பதைக் குறிக்கும் வகையில் எழுதுகோலின் முனையையும்; கற்கும் கல்விக்கு எல்லைகள் இல்லை என்பதை விளக்கும் வகையில் இரண்டு இறகுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பிற செயல்பாடுகள்
தொகுமாணவியர் கல்வி பயில்வதற்கேற்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள இக்கல்லூரியில், எளிமையாக அனைத்து மாணவியரும் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களைக் கற்பிக்கும் திறமை, அனுபவம், தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். படிப்பதற்கு ஏற்ற இயற்கை எழில் சூழ்ந்த காற்றோட்டமான அமைதிச் சூழலில் பயிலும் மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறுகின்றனர். கல்லூரி, கல்வி, விளையாட்டு மட்டுமல்லாது, பிற திறன்களையும் நல்லொழுக்கங்களையும் வளர்க்கும் விதமாகப் பாடம்சார்ந்த அமைப்புகளில் மாணவியரை ஈடுபடுத்தி வருகிறது. சிறப்புத்தேவையுடைய மாணவியருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்து மாணவியரைத் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றி பெற வழிநடத்துகிறது. சுயத்தொழில் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "SOKA IKEDA". sokaikedacollege.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-19.