சோக்குவா சால்

அரிசி வகை

சோக்குவா சால் (Chokuwa saul) என்பது இந்திய நாட்டின் அசாம் மாநிலத்தில் காணப்படும் ஒரு வகை அரை பசையுடைய அரிசி ஆகும். அசாமின் ஒட்டும் அரிசி பாரம்பரியமாக போரா (பசையுடையது) மற்றும் சோக்குவா (அரை-பசையுடையது) என சமைத்த பிறகு அவற்றின் ஒட்டும் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. [1] அசாம் மற்றும் பழங்குடி அசாமிகளுக்கு இந்த அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. [2]

2016 ஆம் ஆண்டில், சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சூசு சதீர்த்தா என்ற அமைப்பு அசாம் வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சோக்குவா அரிசிக்கு புவியியல் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தது. [3] 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று இந்திய அரசின் புவியியல் அடையாளப் பதிவுத் துறையால் வெளியிடப்பட்ட இதழின் 124வது பதிப்பு சோக்குவா அரிசிக்கு புவியியல் குறிப்பை வழங்கியது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Genetic diversity analysis of specialty glutinous and low-amylose rice (Oryza sativa L.) landraces of Assam based on Wx locus and microsatellite diversity". December 2020.
  2. "'The rice that needs no cooking': magic rice variety from Assam gets GI tag". 2018-08-11.
  3. http://www.ipindia.nic.in/writereaddata/Portal/IPOJournal/1_4799_1/Journal_124.pdf
  4. "Traditional Scarf (Gamosa) of Assam gets Geographical Indications tag". The Sentinel. November 18, 2019. https://www.sentinelassam.com/north-east-india-news/assam-news/traditional-scarf-gamosa-of-assam-gets-geographical-indications-tag/. பார்த்த நாள்: April 24, 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோக்குவா_சால்&oldid=3876083" இலிருந்து மீள்விக்கப்பட்டது