சோடியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு

சோடியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Sodium hexafluoroantimonate) என்பது NaSbF6 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3]

சோடியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
Sodium hexafluoroantimonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம்;அறுபுளோரோ ஆண்டிமனி(1-)
இனங்காட்டிகள்
16925-25-0
ChemSpider 10626272
EC number 240-989-8
InChI
  • InChI=1S/6FH.Na.Sb/h6*1H;;/q;;;;;;+1;+5/p-6
    Key: HKLMYZVMEYYVBS-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16689647
  • F[Sb-](F)(F)(F)(F)F.[Na+]
UNII 7JW6105AEM
பண்புகள்
NaSbF6
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

புரோமின் முப்புளோரைடுடன் ஆண்டிமனி(III) ஆக்சைடைச் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்துவதன் மூலம் சோடியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டை தயாரிக்கலாம்.

6Sb2O3 + 20BrF3 + 12NaF -> 12Na[SbF6] + 10Br2 + 9O2

அல்லது ஆண்டிமனியுடன் சோடியம் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை தயாரிக்கலாம்.

SbF5 + NaF -> Na[SbF6]

இயற்பியல் பண்புகள்

தொகு

சோடியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது நீரில் கரையும்.[4] a=0.820 Å அலகு செல் அளவுருவுடன் Pa3 என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக வடிவத்தில் படிகமாகிறது.

வேதியியல் பண்புகள்

தொகு

சோடியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு நீரிய கரைசல்களில் மெதுவாகப் பகுதி நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sodium hexafluoroantimonate, 98%, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
  2. "Sodium hexafluoroantimonate(V)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
  3. Toxic Substances Control Act (TSCA): PL 94-469 : Candidate List of Chemical Substances (in ஆங்கிலம்). Environmental Protection Agency, Office of Toxic Substances. 1977. p. 1177. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
  4. Haynes, William M. (22 June 2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
  5. Possart, Wulff (12 May 2006). Adhesion: Current Research and Applications (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-60710-5. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.