சோடியம் ஓசோனைடு

வேதிச் சேர்மம்

சோடியம் ஓசோனைடு (Sodium ozonide) NaO
3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். ஆக்சிசன் மிகுதியாக உள்ள சோடியம் சேர்மமாக காணப்படும் இதில் சோடியம் நேர்மின் அயனியும் ஓசோனைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்கியுள்ளன. செஞ்சாய்சதுரக் கட்டமைப்பை சோடியம் ஓசோனைடு வெளிப்படுத்துகிறது.[1]

சோடியம் ஓசோனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஓசோனைடு
பண்புகள்
NaO3
தோற்றம் அடர் சிவப்பு திண்மம்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சோடியம் நைத்திரைட்டு கட்டமைப்பு (செஞ்சாய்சதுரம்)
புறவெளித் தொகுதி Im2m (No. 44)
Lattice constant a = 3.5070 Å, b = 5.7703 Å, c = 5.2701 Å
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் புளோரைடு
சோடியம் குளோரைடு
சோடியம் புரோமைடு
சோடியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் ஓசோனைடு
ருபீடியம் ஓசோனைடு
சீசியம் ஓசோனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் ஐதராக்சைடுடன் ஓசோனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் சோடியம் ஓசோனைடு உருவாவதாக சில பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.[2] ஆனால் உருவாகும் விளைபொருள் மாசு கலந்த சேர்மமாக இருக்கும் என்றும் அறை வெப்பநிலையில் கூறப்பட்ட நிலைத்தன்மை மற்ற அறிக்கைகளோடு முரண்பட்டதாகவும் உள்ளது.[3] பொட்டாசியம் ஓசோனைடு, ருபீடியம் ஓசோனைடு, சீசியம் ஓசோனைடு ஆகிய ஒசோனைடுகளுடன் ஒப்பிடுகையில் சோடியம் ஓசோனைடு இப்பண்பில் மாறுபடுகிறது. அவை நேரடியாக அவ்வுலோகத்துடன் ஓசோனைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலேயே கிடைத்து விடுகின்றன. ஆனால் இங்கு அமோனியா கரைசலும் கிரிப்டண்டுகளும் அயனிப் பரிமாற்ற வினையும் தேவையாகின்றது.[1][4]

அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மை அற்றதாகவும் -10 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சோடியம் மீயாக்சைடு, ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது.[5]

இருப்பினும் -18 பாகை செல்சியசு வெப்பநிலையில் சில மாதங்களுக்குச் சேமித்து வைக்க இயல்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Klein, Wilhelm; Armbruster, Klaus; Jansen, Martin (1998). "Synthesis and crystal structure determination of sodium ozonide". Chemical Communications (Royal Society of Chemistry (RSC)) (6): 707–708. doi:10.1039/a708570b. பன்னாட்டுத் தர தொடர் எண்:1359-7345. 
  2. McLachlan, A. D.; Symons, M. C. R.; Townsend, M. G. (1959). "193. Unstable intermediates. Part V. Ozonides and superoxides". Journal of the Chemical Society (Resumed) (Royal Society of Chemistry (RSC)): 952. doi:10.1039/jr9590000952. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. 
  3. Solomon, I. J.; Kacmarek, A. J. (1960). "Sodium Ozonide". The Journal of Physical Chemistry (American Chemical Society (ACS)) 64 (1): 168–169. doi:10.1021/j100830a507. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. 
  4. Korber, Nikolaus; Jansen, Martin (1992). "Synthesewege zu neuen ionischen Ozoniden" (in de). Chemische Berichte (Wiley) 125 (6): 1383–1388. doi:10.1002/cber.19921250613. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940. 
  5. Tokareva, S. A.; Pilipenko, G. P. (1964). "Thermal decomposition of sodium ozonide". Bulletin of the Academy of Sciences, USSR Division of Chemical Science (Springer Science and Business Media LLC) 13 (4): 686–688. doi:10.1007/bf00845322. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஓசோனைடு&oldid=3317323" இலிருந்து மீள்விக்கப்பட்டது