சோதனை ஒலிப்பியல்

சோதனை ஒலிப்பியல் (Experimental phonetics) என்பது பேச்சொலி மற்றும் மனிதப் பேச்சின் அலகுகள் முதலானவற்றை அறிவியல் முறைப்படி ஆராயும் அறிவியல் துறையின் ஒரு கிளையாகும். இந்த அறிவியல் துறை ஒலிப்பியலின் அடிப்படை முறைகளான உச்சரிப்பு ஒலியியல், பெளதிக ஒலியியல், கேட்பொலியியல் ஆகிய ஆராயும் முறைகளைப் பற்றிப் பேசுகிறது. மேலும், மாதிரிப்படிவ வரன்முறை சார்ந்த ஒலிப்பியலை புத்தாய்வு செய்து அறிய உதவும் பகுப்பு ஒலிப்பியல் மற்றும் மீபகுப்பு ஒலிப்பியல் பிரிவுகளில் இச்சோதனை ஒலிப்பியல் முறை பயன்படுகிறது. இவற்றோடு, ஒலிப்பியல் கோட்பாடுகள் மற்றும் கருதுகோள்களைச் சோதித்து அவற்றை ஆதரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ இம்முறை பயன்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_ஒலிப்பியல்&oldid=3367852" இலிருந்து மீள்விக்கப்பட்டது