சோனம் பிஷ்ட்
சோனம் பிஷ்ட் இந்தியாவின் உத்தரகாண்டைச் சேர்ந்தவரும், அழகிப்போட்டியில் வெற்றி பெற்று, யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியே நடிகையானவருமாவார்.
சோனம் பிஷ்ட் | |
---|---|
பிறப்பு | தேராதூன், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | தொலைக்காட்சி நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2013 ம் ஆண்டு முதல் |
தொலைக்காட்சி | லஜ்வந்தி |
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான, டேராடூனைச் சேர்ந்த இவர் கேந்திரிய வித்யாலயா ஹதிபர்கலாவில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் உத்தரகாண்ட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். [1] மேலும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ளார். [2]
அதே ஆண்டில், அவர் இந்தியாவின் சிறந்த சினிஸ்டார்ஸ் கி கோஜ் என்ற யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூன்றாவது பாகத்தில் பங்கேற்று, போட்டியிட்டுள்ளார்.. [3]
2015 ஆம் ஆண்டில், அவர் ஜீ டிவியின் லஜ்வந்தி என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். தற்போது ஸ்டார் ப்ளஸின் சோப் ஓபரா சுஹானி சி ஏக் லட்கியில் நாயகன் யுவராஜின் இரண்டாவது மனைவியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
தொலைக்காட்சி
தொகுஆண்டு | காட்டு | பாத்திரம் | பங்கு |
---|---|---|---|
2015–2016 | லஜ்வந்தி | துலாரி பரத்வாஜ் | முக்கிய கதாநாயகன் எதிரியாக மாறினான் |
2016–2016 | சுஹானி சி ஏக் லட்கி | பல்விந்தர் யுவராஜ் பிர்லா/பார்பி | முக்கிய எதிரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, Manoj (29 December 2013). "Miss Uttarakhand winners seek acting career". The Pioneer. http://www.dailypioneer.com/state-editions/dehradun/miss-uttarakhand-winners-seek--acting-career.html. பார்த்த நாள்: 23 March 2016.
- ↑ "Sonam Bisht" இம் மூலத்தில் இருந்து 4 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160404064408/http://beautypageants.indiatimes.com/miss-india/contestants/miss-india-delhi-2014/Sonam-Bisht/profile/29243971.cms. பார்த்த நாள்: 23 March 2016.
- ↑ "Emraan Hashmi slapped by Cine stars Ki Khoj contestant Sonam Bisht". The Times of India. 14 August 2014. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Emraan-Hashmi-slapped-by-Cine-stars-Ki-Khoj-contestant-Sonam-Bisht/articleshow/40250213.cms. பார்த்த நாள்: 23 March 2016.