சோனாலீ விசுணு சிங்கட்டே
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
சோனாலி விஷ்ணு ஷிங்கேட் (Sonali Shingate) (பிறப்பு: மே 27, 1995) மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில்முறை கபடி விளையாட்டு வீராங்கனை ஆவார். ஜகார்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், காத்மண்டுவில் நடைபெற்ற 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்ற இந்திய அணிகளில் இவர் பங்கு வகித்தார்.
ஷிங்கேட் இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார், மேலும் தேசிய கபடி சாம்பியன்ஷிப்பில் ரயில்வே அணிக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். மகாராஷ்டிரா அரசு இவருக்கு மாநிலத்தின் மிக உயர்ந்த விளையாட்டு அங்கீகாரமான சிவ சத்ரபதி விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
குடும்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]
தொகுஷிங்கேட் மும்பையின் லோயர் பரேலில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பாதுகாப்புக் காவலராக வேலை செய்து வந்தார். அவரின் தாய் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார். அவர் மகரிஷி தயானந்த் கல்லூரியில் படிக்கும் போது கபடி விளையாடத் தொடங்கினார். ஷிங்கேட் தனது விளையாட்டிற்கான பயிற்சியை சிவ சக்தி மகிளா சங்க கிளப்பில் பயிற்சியாளராக இருக்கும் ராஜேஷ் படாவேவிடம் தொடங்கினார். அந்த நாட்களில் அவர் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அப்போது அவருக்கான காலணிகள் மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கக் கூட சாத்தியம் இல்லாமல் இருந்தது.
பின்னர் அவரது பயிற்சியாளர் படாவே அவருக்கு காலணிகள் மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து உதவினார். ஷிங்கேட் விளையாடுவதை அவரது குடும்பத்தினர் ஆதரித்திருந்தாலும், அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். அதனால் பல சமயங்களில் அவர் மாலை நேரங்களில் விளையாட்டு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு அடுத்த நாள் தேர்வுக்காக நள்ளிரவில் எழுந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆரம்ப விளையாட்டு நாட்களில் ஷிங்கேட் தனது வலிமையை வளர்க்கக் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. அவர் ஓடுவதில் சிரமத்தை எதிர்கொண்டார். அதனால் அவர் கால்களையும் அடி வயிற்றையும் வலுப்படுத்திக் கொள்ள கால்களில் கட்டப்பட்ட எடையுடன் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார்.
ஷிங்கேட் தொடர்ந்து நாட்டுக்காக சிறப்பாக விளையாட விரும்பும் அதே நேரத்தில் ஆண்களுக்கான ப்ரோ கபடி தொடர் போலவே பெண்களுக்கான உள்நாட்டு கபடி தொடர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.
விளையாட்டுத் தொழில்முறை வாழ்க்கை[தொகு]
தொகு- ஷிங்கேட் 2014ஆம் ஆண்டு தனது விளையாட்டுத் துறை தொழிலை துவங்கினார். 2014-15ல் மகாராஷ்டிரா மாநிலத்திற்காக ஜூனியர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று தனது பயணத்தை துவக்கினார். ஜுனியர் பிரிவு கபடி போட்டிகளில் தனது குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 2015ல் இந்திய ரயில்வேயில் சேர்ந்த பிறகு அந்த துறைக்கான 64வது (2016-17) 66வது (2018-19) 67வது (2019-20) போட்டிகளில் தங்கப்பதக்கமும், 65வது (2017-18) தேசிய சீனியர்கள் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
- ஷிங்கேட் ரயில்வே அணியின் முன்னணி களவீரர் என்பதால் தனது சிறப்பான செயல்பாடு காரணமாக கூடுதல் புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். 2018ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடத் தேர்வு பெற்றார். அந்த அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 2019ல் காத்மண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்ற அணியில் இவரும் இருந்தார்.
- 2018ஆம் ஆண்டு இந்தோனீசியாவின் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி
- 2019ஆம் ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம்
- 2020ல் மகாராஷ்டிரா அரசு, இவருக்கு மாநிலத்தின் மிக உயர்ந்த விளையாட்டு அங்கீகாரமான, சிவ சத்ரபதி விருதை வழங்கி கெளரவித்துள்ளது.