பயனர்:East waves/மணல்தொட்டி
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | வெல்லுவ கொரத் விசுமயா | ||||||||||||||||||||
பிறந்த நாள் | 14 மே 1997 | ||||||||||||||||||||
பிறந்த இடம் | சிறீகந்தபுரம், கண்ணூர் மாவட்டம், கேரளம், இந்தியா[1] | ||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 400 மீட்டர்கள் | ||||||||||||||||||||
சாதனைகளும் பட்டங்களும் | |||||||||||||||||||||
தன்னுடைய சிறப்பானவை | 400 மீ - 52.12 (2019) | ||||||||||||||||||||
|
வெல்லுவா கொரத் விசுமயா (Velluva Koroth Vismaya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார். 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் விசுமயா சிறப்புத் தகுதி பெற்றவராவார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுத்து தங்கம் வென்ற இந்திய பெண்களில் இவரும் ஒரு வீராங்கனையாக இடம்பெற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டிகளில் பெண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதே போட்டியின் 4×400 மீட்டர் கலப்பு வீரர்கள் பிரிவிலும் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுவி.கே விசுமயா கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 1997 ஆம் ஆண்டு பிறந்தார்.வி.கே விசுமயாவின் தந்தை ஒரு மின்சார பணியாளர். தாயார் ஓர் இல்லத்தரசி. உயர்கல்வி படித்து எதிர்காலத்தில் ஒரு பொறியாளராகவும், கல்வி உலகில் தொடர்ந்து சஞ்சரிக்கவும் இவர் விரும்பினார். ஆனால் தடகளப் பயிற்சியில் இருந்த அவரின் சகோதரி விதிசாவைப் போலவே தடகள விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கினார்.
வெற்றிகள்
தொகு- 2013 ஆம் ஆண்டு கொத்தமங்கலம் செயிண்ட் சியார்ச்சு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் போது தென்னிந்திய அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
- 2017ஆம் ஆண்டு அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன் பட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
- 2019 ஆம் ஆண்டு செக் குடியரசின் புரோனோ நகரில் நடந்த தடகள சந்திப்பில் 400 மீட்டர் ஓட்டத்தை 52.12 வினாடிகளில் ஓடி தங்க பதக்கம் வென்றுள்ளார்.[3]
- 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 59 ஆவது தேசிய திறந்தநிலை தடகளப் போட்டிகளில் 400 மீ ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.[4]
- 2021 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "VELLUVA KOROTH Vismaya". Asian Games 2018 Jakarta Palembang. https://en.asiangames2018.id/athletes/athlete/VELLUVA-KOROTH-Vismaya-3009140/.
- ↑ "வி.கே. விஸ்மாயா: பொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ "Vismaya wins gold with new personal best in Czech Republic". The Indian Express (in ஆங்கிலம்). 2019-08-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ https://sportstar.thehindu.com/athletics/national-open-championships-2019-tajinderpal-singh-shot-put-national-record-tokyo-2020-olympics-vismaya-anjali-devi-400m/article29668100.ece
புற இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் East waves/மணல்தொட்டி-இன் குறிப்புப் பக்கம்
Sonali Shingate At SAG 2019 | |
தனிநபர் தகவல் | |
---|---|
பிறந்த பெயர் | Sonali Shingate |
முழு பெயர் | Sonali Vishnu Shingate |
தேசியம் | இந்தியாn |
குடியுரிமை | இந்தியாn |
பிறப்பு | 27 மே 1995 மும்பை மகாராட்டிரம், இந்தியா |
தொழில் | சடுகுடு Player |
ஆண்டுகள் செயலில் | from 2014 to date |
உயரம் | 171 CM |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | சடுகுடு |
இடம் | Raider |
League | Women's Kabaddi Challenge |
கழகம் | Shivshakti Mahila Sangh |
அணி | இந்தியா,
மகாராட்டிரம், இந்திய இரயில்வே, Ice Divas |
சோனாலி விஷ்ணு ஷிங்கேட் (Sonali Shingate) (பிறப்பு: மே 27, 1995) மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில்முறை கபடி விளையாட்டு வீராங்கனை ஆவார். ஜகார்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், காத்மண்டுவில் நடைபெற்ற 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்ற இந்திய அணிகளில் இவர் பங்கு வகித்தார்.
ஷிங்கேட் இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார், மேலும் தேசிய கபடி சாம்பியன்ஷிப்பில் ரயில்வே அணிக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். மகாராஷ்டிரா அரசு இவருக்கு மாநிலத்தின் மிக உயர்ந்த விளையாட்டு அங்கீகாரமான சிவ சத்ரபதி விருதை வழங்கி கெளரவித்துள்ளது.[1]
குடும்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுஷிங்கேட் மும்பையின் லோயர் பரேலில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பாதுகாப்புக் காவலராக வேலை செய்து வந்தார். அவரின் தாய் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார். அவர் மகரிஷி தயானந்த் கல்லூரியில் படிக்கும் போது கபடி விளையாடத் தொடங்கினார். ஷிங்கேட் தனது விளையாட்டிற்கான பயிற்சியை சிவ சக்தி மகிளா சங்க கிளப்பில் பயிற்சியாளராக இருக்கும் ராஜேஷ் படாவேவிடம் தொடங்கினார். அந்த நாட்களில் அவர் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அப்போது அவருக்கான காலணிகள் மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கக் கூட சாத்தியம் இல்லாமல் இருந்தது.
பின்னர் அவரது பயிற்சியாளர் படாவே அவருக்கு காலணிகள் மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து உதவினார். ஷிங்கேட் விளையாடுவதை அவரது குடும்பத்தினர் ஆதரித்திருந்தாலும், அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். அதனால் பல சமயங்களில் அவர் மாலை நேரங்களில் விளையாட்டு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு அடுத்த நாள் தேர்வுக்காக நள்ளிரவில் எழுந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.[1]
ஆரம்ப விளையாட்டு நாட்களில் ஷிங்கேட் தனது வலிமையை வளர்க்கக் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. அவர் ஓடுவதில் சிரமத்தை எதிர்கொண்டார். அதனால் அவர் கால்களையும் அடி வயிற்றையும் வலுப்படுத்திக் கொள்ள கால்களில் கட்டப்பட்ட எடையுடன் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார். [1]
ஷிங்கேட் தொடர்ந்து நாட்டுக்காக சிறப்பாக விளையாட விரும்பும் அதே நேரத்தில் ஆண்களுக்கான ப்ரோ கபடி தொடர் போலவே பெண்களுக்கான உள்நாட்டு கபடி தொடர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். [1]
விளையாட்டுத் தொழில்முறை வாழ்க்கை
தொகு- ஷிங்கேட் 2014ஆம் ஆண்டு தனது விளையாட்டுத் துறை தொழிலை துவங்கினார். 2014-15ல் மகாராஷ்டிரா மாநிலத்திற்காக ஜூனியர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று தனது பயணத்தை துவக்கினார். ஜுனியர் பிரிவு கபடி போட்டிகளில் தனது குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 2015ல் இந்திய ரயில்வேயில் சேர்ந்த பிறகு அந்த துறைக்கான 64வது (2016-17) 66வது (2018-19) 67வது (2019-20) போட்டிகளில் தங்கப்பதக்கமும், 65வது (2017-18) தேசிய சீனியர்கள் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.[2]
- ஷிங்கேட் ரயில்வே அணியின் முன்னணி களவீரர் என்பதால் தனது சிறப்பான செயல்பாடு காரணமாக கூடுதல் புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். 2018ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடத் தேர்வு பெற்றார். அந்த அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 2019ல் காத்மண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்ற அணியில் இவரும் இருந்தார்.[3]
- 2018ஆம் ஆண்டு இந்தோனீசியாவின் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி
- 2019ஆம் ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம்
- 2020ல் மகாராஷ்டிரா அரசு, இவருக்கு மாநிலத்தின் மிக உயர்ந்த விளையாட்டு அங்கீகாரமான, சிவ சத்ரபதி விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "jபிபிசி தமிழ்".
- ↑ "10 things to know about Sonali Shingate on her 25th birthday". Kabaddi Adda (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ "Bonus Queen Sonali Shingate is definitely a name to reckon with". Khel Kabaddi (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
சுவப்னா பர்மன்
தொகுசுவப்னா பர்மன் (பிறப்பு 29 அக்டோபர் 1996) இந்தியாவின் ஏழு தடகள விளையாட்டு (heptathlete) வீராங்கனை ஆவார். பர்மன் தனது 21வது வயதில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் பிரிவில் ஏழுவகைத்தடகளப் போட்டியில் முதன்முதலில் தங்கம் வென்ற இந்தியராவார்.எப்டதலான் என்பது ஏழுவகை தடகள போட்டிகளை உள்ளடக்கியது. இது மிகவும் கடினமான தடகள போட்டிகளில ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் அவர் கடுமையான பல்வலியுடன் இதில் போட்டியிட வேண்டியிருந்தது. வலியைக் குறைக்க அவர் கன்னம் மற்றும் தாடையில் பெரிய பிளாஸ்திரியை ஒட்டிக்கொண்டு மைதானத்தில் தோன்ற வேண்டியிருந்தது. [1]ஆகஸ்ட் 2019ல் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுபர்மன், மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரிக்கு அருகிலுள்ள கோஸ்பாரா கிராமத்தில் 1996ம் ஆண்டு ஏழ்மையான ராஜ்போங்ஷி குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தாய் ஒரு இல்லத்தரசி, அவரது தந்தை ரிக்க்ஷா இழுப்பவர்.இருவரும் சேர்ந்து குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு இருவேளை உணவுக்கு போதுமான அளவு மட்டுமே வருமானத்தை ஈட்ட முடிந்தது. தங்கள் மகளின் தடகள வாழ்க்கைக்கு போதுமான செலவு செய்ய அவர்களால் இயலவில்லை என்றாலும் அவர்களால் இயன்றவரை செய்தனர். பர்மனின் தந்தை தினமும் அவர் பயிற்சி எடுக்கும் விளையாட்டு மைதானத்திற்க்கு தனது ரிக்ஷாவில் சென்று இறக்கிவிடுவார். தனது விளையாட்டு பயணத்தை ஊக்குவித்து ஆதரித்தது தன் பெற்றோர் எனக் கூறுகிறார் பர்மன். [2] [1]
அவருக்கு மற்றொரு சவாலும் இருந்தது. பர்மன் ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்களுடன் பிறந்தார். பல ஆண்டுகளாக அவர் ஐந்து விரல்காரர்கள் பயன்படுத்தும் சாதா ஷூவில் தனது காலின் ஆறுவிரல்களையும் திணித்து கொண்டு சிரமப்பட்டு வந்தார். ஏழு தடகள விளையாட்டுகளை கொண்ட எப்டதலான் விளையாட்டு வீரரின் அதிகபட்ச மன வலிமையையும் உடல் வலிமையையும் கோரும் விளையாட்டாகும். இந்த விளையாட்டு, வலிமையான ஓட்டம் சிறப்பான எறிதல் மற்றும் தாண்டுதல் உத்திகளை கோருகிறது. இதன் மூலமே பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் போட்டிகளில் கூடுதல் புள்ளிகளை ஈட்ட முடியும்.
பர்மனை பொறுத்தவரை ஒவ்வொரு முறை தாண்டும் போட்டியில் தரையிறங்கும் போது வலிமிகுந்ததாக இருந்தது. இதனால் சிறு தொலைவு ஓட்டமும் மோசமானதாக இருந்தது.
2012ல் மேலும் சிறப்பான பயிற்சி பெற கொல்கத்தா வந்தார். 2013ம் ஆண்டில்,கொல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டியில் அமைந்துள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியாளராக இருந்த பர்மனின் பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் அவரை தேசிய விளையாட்டு ஆணையத்தின் விடுதிக்கு அழைத்து வந்தார்.
2013ல் குண்டூரில் நடந்த இளைஞர் எப்டதலான் போட்டிக்கு சர்க்கார் அவரை அனுப்பினார். பர்மன் 4,435 புள்ளிகளை பெற்று சாதனைப் புரிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதுவே அவரது எப்டதலான் வாழ்க்கை பயணத்தின் துவக்கமாக இருந்தது. அதன்பிறகு அவரது காலுக்கு பொருத்தமான காலணிகளை தயாரிக்க பல்வேறு காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தன. [3]
சாதனைகள்
தொகு2014ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனியர் பிரிவில் பங்கெடுத்ததே அவரது முதல் போட்டியாகும்.
2017 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5,942 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்
அதன்பிறகு அதே ஆண்டில் பாட்டியாலா கூட்டமைப்பு கோப்பையில் 5,897 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்
அதே போட்டியில் 2019ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் எப்டதலான் பிரிவில் தங்கம் வென்றார்.
ஆகஸ்ட் 2019 ஆண்டு அவரது சிறந்த விளையாட்டு செயல்திறனுக்காக உயரிய அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. [3]
மேற்சான்றுகள்
தொகுAsian Games: India athletes break barriers to make sports history [1]
BBCEXCLUSIVE: गोल्ड जीतने की ख़ुशी के बीच छलकी स्वप्ना की पीड़ा [2]
The unlikely rise of Swapna Barman: From wrong body type toAsia's finest athlete [3]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு: 29 அக்டோபர் 1996
கோஷ்பரா, ஜல்பாய்குரி, மேற்கு வங்கம், இந்தியா
விளையாட்டு
நாடு: இந்தியா
விளையாட்டு: தடகளம்
நிகழ்வுகள்: ஹெப்தலான்
சாதனைகளும், விருதுகளும்
தனிப்பட்ட சாதனை: 6,206 புள்ளிகள் (ஜகார்த்தா 2018)
பதக்கங்கள்
தொகுஇந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவை:
2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம்.
2017 புவனேஷ்வர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம்.
2019 தோஹா ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம்
2017 டில்லி பெடரேஷன் கப் போட்டியில் தங்கம்