சோனியா பலெய்ரோ

சோனியா பலெய்ரோ (பிறப்பு 1977), இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமாவார். 2006 ம் ஆண்டில் இவரது முதல் நாவலான தி கேர்ள் வைக்கிங் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2010 ம் ஆண்டில் பியூட்டிஃபுல் திங்: இன்சைட் தி சீக்ரெட் வேர்ல்ட் ஆஃப் பாம்பேஸ் டான்ஸ் பார்ஸ் புத்தகமும் 2015 ம் ஆண்டு 13 மென் (2015) புத்தகமும் வெளியானது.2021 ம் ஆண்டு ஜனவரியில் தி குட் கேர்ள்ஸ்: ஆன் ஆர்டினரி கில்லிங் வெளியிடப்பட்டது [1]

சோனியா பலெய்ரோ
பிறப்புகோவா, இந்தியா
தொழில்பத்திரிகையாளர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பலெய்ரோ கோவாவில் பிறந்தவராயிருந்தாலும், [2] இந்தியத் தலைநகரமான புது தில்லியில் தான் வளர்த்துள்ளார், அங்குள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பட்டதாரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, பலெய்ரோ தனது முதல் நாவலளை எழுதத் தொடங்கியுள்ளார். இதுவே 2006 ம் ஆண்டில் பென்குயின் வைக்கிங்கால் வெளியிடப்பட்டது. 

விருதுகள் தொகு

"இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது கவனத்தை ஈர்த்து, அவர்களைப் பற்றி உணர்திறன், மனிதநேயம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் எழுதியதற்காக". பலெய்ரோவிற்கு 2011 ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான கர்மவீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது, [3] 2006 ஆம் ஆண்டின் சிஎன்என் இளம் பத்திரிகையாளர் விருதில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். [4]

நூல் பட்டியல் தொகு

  • பெண் (பெங்குயின் வைக்கிங், 2006)
  • முதல் ஆதாரம்: பெங்குயின் புக் ஆஃப் நியூ ரைட்டிங் ஃப்ரம் இந்தியா II (பெங்குயின், 2006)
  • ரிஃப்ளெக்டட் இன் வாட்டர்: ரைட்டிங்ஸ் ஆன் கோவா (பெங்குயின், 2006)
  • தி ஃபிக்ஷன் கலெக்‌ஷன்: ட்வென்டி இயர்ஸ் ஆஃப் பெங்குயின் இந்தியா (பெங்குயின், 2007)
  • இந்தியா (ISBN எடிசியோனி, 2008)
  • எய்ட்ஸ் சூத்ரா: இந்தியாவில் இருந்து சொல்லப்படாத கதைகள் (ரேண்டம் ஹவுஸ், விண்டேஜ், ஆங்கர் புக்ஸ், மொண்டடோரி, ஆகஸ்ட் 2008)
  • சர்பஞ்ச் சாஹிப்: இந்தியாவின் முகத்தை மாற்றுதல் (ஹார்பர் லிட்மஸ், 2009)
  • பியூட்டிஃபுல் திங்: இன்சைட் தி சீக்ரெட் வேர்ல்ட் ஆஃப் பாம்பேஸ் டான்ஸ் பார்ஸ் (பெங்குயின், இந்தியா, அக்டோபர் 2010)
  • 13 ஆண்கள் (டெகா, யுஎஸ், அக்டோபர் 2015)
  • நல்ல பெண்கள்: ஒரு சாதாரண கொலை (பெங்குயின், 2021)

மேற்கோள்கள் தொகு

  1. Service, Tribune News. "Sonia Faleiro's The Good Girls is a tale of retribution for patriarchy". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  2. Baher, Olivia (June 2012). "Beautiful Thing a Breakout Book for Sonia Faleiro". பார்க்கப்பட்ட நாள் June 24, 2020.
  3. "Media Citizen Karmaveer Puraskaar". Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் June 24, 2020.
  4. "Recognising talent". thehindu.com. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_பலெய்ரோ&oldid=3673398" இலிருந்து மீள்விக்கப்பட்டது