சோனி எரிக்சன்

சோனியின் ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனம்

சோனி கைபேசி தொலைத்தொடர்பு (Sony Mobile Communications, முன்னர்: சோனி எரிக்சன், Sony Ericsson) நிறுவனமானது 2001 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் திகதி ஜப்பானிய இலத்திரனியல் தாபனமான சோனி நிறுவனத்தினாலும் (Sony corporation , சுவீடன் தொலைத்தொடர்பாடல் கம்பனியான எரிக்சன் (Ericsson) நிறுவனத்தினாலும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் லண்டன் நகரின் ஹாமர்ஸ்மித் பகுதியில் அமைந்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு நிலையங்கள் லுண்ட், சுவீடன், டோக்யோ, பீஜிங் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. சோனி எரிக்சன் நிறுவனமானது 2009 ம் ஆண்டில் நோகியா, சாம்சங், எல். ஜி ஆகியவற்றிற்கு அடுத்ததாக உலகின் 4 வது பெரிய தொலைபேசி உற்பத்தியாளராக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி
வகைகூட்டு முயற்சி நிறுவனம்
நிறுவுகைஅக்டோபர் 1, 2001[1]
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள் Sir Howard Stringer (Chairman)
Bert Nordberg (President)
Rikko Sakaguchi (Executive Vice President)
Kristian Tear (Executive Vice President)
William A Glaser Jr (Chief Financial Officer)
தொழில்துறைTelecommunications
உற்பத்திகள்Mobile phones
Mobile music
வருமானம் 6.788 billion (2009)[2]
இலாபம் -€836 million (2009)
பணியாளர்8,450 (as of April 2010)[3]
தாய் நிறுவனம்Sony
இணையத்தளம்SonyEricsson.com

அண்மைய நிகழ்வுகள் தொகு

சோனி எரிக்சன் ஆனது அண்மைக்காலமாக வளர்ச்சியை அனுபவித்து வந்தாலும் 2008 ம் ஆண்டு அதன் இலாப வீதம் குறைந்ததன் காரணமாக நிறுவனத்தின் தென் கொரிய போட்டியாளரான LG Electronics யினால் கைப்பற்றப்பட்டது.

மீண்டும் 2008 ம் ஆண்டு motorola வுடனான போட்டியின் காரணமாக கம்பனியின் இலாபத்தில் சரிவு ஏற்பட இன்னொரு முன்னேச்செரிக்கையை விடுத்தது. 2008 ம ஆண்டு ஜூலை 18 ம திகதியளவில் சோனி எரிக்சனானது 9 ,400 தொழிலாளர்களை கொண்டிருந்தது. 2009 முதல் பேர்ட் நோர்ட்பெர்க் கம்பனியின் தலைவராக பதவி ஏற்றார். தற்பொழுது எரிக்சன் நிறுவனத்திலிருந்த பங்குகளை திரும்ப பெற்று சோனி என்ற பெயருடன் வெளிவருகிறது.

வரலாறு தொகு

எதிர்கொண்ட பிரச்சினைகள் தொகு

ஐக்கிய அமரிக்காவில் General Electric உடன் சேர்ந்தது. தனது உற்பத்திக்கான chips ஐ Philips facility Philips, New Mexico New Maxico எனும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் 2000 ம் ஆண்டு Philips தொழிட்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தானது சோனி எரிக்சனுக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியது. பல தசாப்தங்களாக கையடக்கத்தொலைபேசி உற்பத்தியில், உலகின் 3வது பெரிய இந்நிறுவனத்துக்கு இந்த திடீர் தீ விபத்தானது பலத்த சேதத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியது.

கூட்டு ஒப்பந்தத்தின் பின்னணி தொகு

200௦ ம் ஆண்டில் சோனி நிறுவனமானது உலகளாவிய ரீதியில், தொலைபேசி சந்தையில் ஒரு சதவீதத்தையும் விட குறைவான பங்கையே தன்னகத்தே கொண்டிருந்தது. ஆகஸ்ட்டு 2001ம் ஆண்டில் இரு கம்பனிகளும் இணைந்து 3500 தொழிலாளர்களுடன் சோனி எரிக்சன் எனும் புதிய கம்பெனி ஆரம்பமானது. 2002ம் ஆண்டளவில் எரிக்சனின் பங்குகள் சடுதியான இறக்கத்தை காண்பித்தன. இந்நிலை தொடரும் எனின் சோனியுடனான இணைவையும், கையடக்கத்தொலைபேசி உற்பத்தியையும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என எரிக்சன் நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனையடுத்து இரு கம்பெனிகளும் இணைந்து தமது பங்கு விலைகளை உயர்த்தும் முகமாக அதிக முதலீடுகளை செய்ய இணங்கின. ஆனாலும்கூட 2005ம் ஆண்டில் உலகளாவியரீதியில் ஐந்தாவது இடத்தில் தடுமாறிக்கொண்டிருந்தது.

திருப்பம் தொகு

திருப்பத்தின் ஆரம்பம் தொகு

ஜூன் 2002இல் சோனி எரிக்சன் நிறுவனமானது ஐக்கிய அமெரிக்க சந்தைக்கு CDMA தொலைபேசிகளை தயாரிப்பதிலிருந்து விடுபட்டு GSM தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த போவதாக அறிவித்தது. 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட முதலாம் காலாண்டு அறிக்கையில் இலாபத்தை அடைந்திருந்ததுடன் தொலைபேசி விலை வீழ்ச்சியும் அதிகரித்த போட்டியும் இனிவரும் காலங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கையும் செய்திருந்தது. அனாலும் சோனி எரிக்சனுக்கு திருப்புமுனையாக அமைந்தது T610 தொலைபேசி மாதிரியாகும். அதைத்தொடர்ந்து வந்த P800 தொலைபேசியின் வெற்றிக்குப்பின் சோனி எரிக்சன் P900 மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.

2004இல், சோனி எரிக்சொனின் சந்தைப்பங்கானது முதலாம்காலாண்டில் 5.6 வீதத்திலிருந்து இலிருந்து இரண்டாம் காலாண்டில் 7 வீதத்திற்கு அதிகரித்தது. பெப்ரவரி 2005இல் சோனி எரிக்சொனின் தலைவரான மைல்ஸ் ப்ளின்ட், 3GSM வேர்ல்ட் கோங்க்ரசில் சோனி எரிக்சொனானது அடுத்த மாதமளவில் கையடக்கத்தொலைபேசி/ டிஜிட்டல் இசை இயக்கியை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தார். இந்த சாதனமானது Walkman phone என அழைக்கப்படும் எனவும் MP3 மற்றும் AAC போன்ற இசைக்கோப்பு வடிவங்களை இயக்கவல்லது எனவும் தெரிவித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Ericsson - press release". Cision Wire. Archived from the original on 2009-07-14. பார்க்கப்பட்ட நாள் 2001-10-01.
  2. ""Sony Ericsson Reports Fourth Quarter and Full Year 2009 Results"". Archived from the original on 2010-08-01. பார்க்கப்பட்ட நாள் 2010-10-24.
  3. IDG.se - 3150 have been fired
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_எரிக்சன்&oldid=3556343" இலிருந்து மீள்விக்கப்பட்டது