சோனுபாவு தகது பசுவந்து

இந்திய அரசியல்வாதி

சோனுபாவு தகது பசுவந்து (Sonubhau Dagadu Baswant) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மகாராட்டிராவின் தானே தொகுதியில் இருந்து இந்தியாவின் 3 ஆவது மக்களவை உறுப்பினராகவும், 4ஆவது மக்களவை உறுப்பினராகவும் இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார்.[1]

சோனுபாவு தகது பசுவந்து
Sonubhau D Baswant
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1967
தொகுதிதானே
நாடாளுமன்ற உறுப்பினர், தாணே
பதவியில்
1967–1971
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1915-02-10)10 பெப்ரவரி 1915
கூத்கர், சாபூர், தானே
இறப்பு16 திசம்பர் 1987(1987-12-16) (அகவை 72)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
As of 24 பிப்ரவரி, 2012

மகாராட்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள குட்காரில் பிறந்த இவர், பார்வதிபாய் என்பவரை மணந்து தானே மாவட்டத்தில் உள்ள சாபூரில் வசித்து வந்தார். ஒரு விவசாயியான இவர் 1952 முதல் 1959 வரை தானே மாவட்ட மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராகவும், 1964 முதல் 1967 வரை அனைத்திந்திய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும், மகாராட்டிர மாநில வன மேம்பாட்டு வாரியம் மற்றும் மகாராட்டிர வளர்ச்சி கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1959 முதல் 1964 வரை தானே மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராகவும், அம்பர்நாத் ஆயுதத் தொழிற்சாலை தேசிய ஊழியர் சங்கம், தானே மாவட்ட பொதுப்பணித் துறை மற்றும் 1964 முதல் சாலைப் பணியாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார். 1963 முதல் சாகாப்பூர் தாலுகா கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியத்தின் தலைவராக இருந்து வருகிறார் [2]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. India: Lok Sabha Secretariat.
  2. "Official biographical sketch". Parliament of India website. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனுபாவு_தகது_பசுவந்து&oldid=3819095" இலிருந்து மீள்விக்கப்பட்டது