சோபா டோபாசு

இந்தியாவின் கேரளாவிலுள்ள வானளாவி

சோபா டோபாசு (Sobha Topaz) இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு வானளாவியாகும். திருச்சூர் நகரத்தின் சோபா நகர் பகுதியில் 97.90 மீட்டர் உயரம் கொண்டு 27 அடுக்குகளுடன் ஒரு சிறப்பு சொகுசு குடியிருப்பு வானளாவியாக இக்கட்டிடம் அமைந்துள்ளது. கேரளாவின் மிக உயர்ந்த கட்டிடங்கள் வரிசையில் சோபா டோபாசு இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. கொச்சியிலுள்ள சாய்சு பேலசு முதலாவது இடத்தில் உள்ளது. உலங்கூர்தி போன்ற சிறு விமானங்கள் இறங்கக்கூடிய இறங்குதள வசதியும் இக்கட்டிடத்தின் மேற்புறத்தில் செய்யப்பட்டுள்ளது. இவ்வானளாவி திட்டத்தை பெங்களூருவைச் சேர்ந்த சோபா நிறுவனம் கட்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கட்டுமான வார விருதுகள் வழங்கும் விழாவில் அந்த ஆண்டில் கட்டப்பட்ட உயரமான கட்டிடங்கள் வரிசையில் சோபா டோபாசு இரண்டாம் பரிசைப் பெற்றது. [1][2][3][4][5]

சோபா டோபாசு
Sobha Topaz
குருவாயூர்-திருச்சுர் சாலையிலிருந்து தோற்றம்
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
வகைமீச்சொகுசு குடியிருப்பு வளாகம்
இடம்திருச்சூர், இந்தியா
கட்டுமான ஆரம்பம்2004
நிறைவுற்றது2012
திறப்பு2012
உரிமையாளர்சோபா நிறுவனம்
உயரம்
கூரை97.90 m (321 அடி)
மேல் தளம்28
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை27
வடிவமைப்பும் கட்டுமானமும்
மேம்பாட்டாளர்சோபா நிறுவனம்
அமைப்புப் பொறியாளர்சோபா நிறுவனம்
முதன்மை ஒப்பந்தகாரர்சோபா நிறுவனம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sobha Topaz". Emporis. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
  2. "PNC Menon honoured with Real Estate Developer award". Manoramaonline. Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
  3. "Record 'Highrise' Pumping by REL THP 45 Concrete Pump". NBM Media. Archived from the original on 2012-08-07. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
  4. "Construction Week India Honours Mr. P.N.C. Menon And Sobha Topaz". India PRwire. Archived from the original on 20 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
  5. "PNC Menon honoured with Real Estate Developer award". Daily Post India. Archived from the original on 21 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டெம்பர் 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபா_டோபாசு&oldid=3791564" இலிருந்து மீள்விக்கப்பட்டது