சோபிதா பார்த்தசாரதி
சோபிதா பார்த்தசாரதி (Shobita Parthasarathy) ஒரு அமெரிக்க கல்வியாளரும், எழுத்தாளரும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் செரால்ட் ஆர். ஃபோர்டு பொதுக் கொள்கை பள்ளியை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுத் துறையில் பங்களிப்பவரும் ஆவார்.[1] இவர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கைத் திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.[2] இது அறிவியல், தொழில்நுட்பம், கொள்கை மற்றும் சமூகத்தின் குறுக்குவெட்டில் உள்ள கேள்விகளுடன் தொடர்புடைய ஆராய்ச்சி, கல்வி மற்றும் கொள்கை ஈடுபாடு மையமாகும். [3] இவர் தனது பணிக்காக பல முக்கிய விருதுகளையும் மானியங்களையும் பெற்றுள்ளார். மேலும், அமெரிக்க காங்கிரசின் சாட்சியம் உட்பட உலகெங்கிலும் உள்ள குடிமை சமூகக் குழுக்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தொழில்நுட்பம், சமபங்கு மற்றும் கொள்கை பற்றிய நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.[4][5]
சோபிதா பார்த்தசாரதி | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
குடியுரிமை | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
அறியப்படுவது | புத்தாக்கக் கொள்கை, அறிவுசார் சொத்து, தொழில்நுட்பத்தின் சமூகவியல், நிபுணத்துவத்தின் அரசியல் |
கல்விப் பின்னணி | |
கல்வி | சிக்காகோ பல்கலைக்கழகம் (இளங்கலை) கோர்னெல் பல்கலைக்கழகம் (முதுகலை) கோர்னெல் பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வு | A global genome? Comparing the development of genetic testing for breast cancer in the United States and Britain (2003, முனைவர் பட்டம்) |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம் |
வலைத்தளம் | |
https://shobitap.org/ |
குறிப்புகள்
தொகு- ↑ "Shobita Parthasarathy | Science, Technology and Public Policy (STPP)".
- ↑ "Shobita Parthasarathy | Gerald R. Ford School of Public Policy".
- ↑ http://stpp.fordschool.umich.edu/
- ↑ Building Genetic Medicine: Breast Cancer, Technology, and the Comparative Politics of Health Care. Inside Technology. MIT Press. 16 March 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262162425.
- ↑ "Get to Know CDT's Fellows: Shobita Parthasarathy". Center for Democracy and Technology. https://cdt.org/insights/get-to-knows-cdts-fellows-shobita-parthasarathy/.