சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில்
சோமநாதீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சந்திரனுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.[1]
சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°56′42″N 80°02′17″E / 12.945135°N 80.038025°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
அமைவிடம்: | சோமங்கலம் |
சட்டமன்றத் தொகுதி: | திருப்பெரும்புதூர் |
மக்களவைத் தொகுதி: | திருப்பெரும்புதூர் |
ஏற்றம்: | 35.87 m (118 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சோமநாதீசுவரர் |
தாயார்: | காமாட்சி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: | சோழ, பாண்டிய, விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் |
வரலாறு | |
கட்டிய நாள்: | கி. பி. 1073ஆம் ஆண்டு |
அமைத்தவர்: | குலோத்துங்க சோழன் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 35.87 மீட்டர் உயரத்தில், (12°56′42″N 80°02′17″E / 12.945135°N 80.038025°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சோமங்கலம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
விவரங்கள்
தொகுஇக்கோயிலின் மூலவர் சோமநாதீசுவரர் மற்றும் தாயார் காமாட்சி அம்மன் ஆவர். கி. பி. 1073இல் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயில் இதுவாகும்.[2]
பெருமை
தொகுசரக்கொன்றை மரத்தை தலவிருட்சமாகக் கொண்டு, தேவார வைப்புத் தலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இக்கோயில் தொண்டை மண்டலத்தை சார்ந்த சென்னையின் நவக்கிரகத் தலங்களில் சந்திரன் கிரகத்தின் பெருமையைப் பறைசாற்றும் தலமாகும்.[3]
சிறப்பு
தொகுசோழ, பாண்டிய, விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. வழக்கமாக சிவன் கோயில்களில் நந்தி பகவான் சிலை, மூலவர் சன்னதியை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயிலில் இறைவனின் ஆணைப்படி, நந்தி, சோழ மன்னனின் எதிரிகளை துவம்சம் செய்வதற்காக, எதிர்த்திசை நோக்கி அமர்ந்திருந்ததால், அதுவே நிரந்தரமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சோமநாதீஸ்வரர் கோயில், சோமங்கலம் தொடர்புக்கு : 9962003496". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-20.
- ↑ Dhivya Dharsanam. "Somangalam Sri Somanaadheeswarar" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ Ganesh (2021-11-18). "Somanaadheeswarar Temple - Somangalam I சோமநாதீஸ்வரர் கோயில் - சோமங்கலம் I India temple tour" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ "Somangalam Somanatheeswarar Temple". Somangalam Somanatheeswarar Temple. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.