சோமியானி
சோமியானி (Somiani) என்பது பாக்கித்தானில் உள்ள பலுசிசுத்தான் மாகாணத்தின் தென்கிழக்கில் ஒரு கடலோர நகரமாக அமைந்துள்ளது. இது கராச்சியிலிருந்து சுமார் 145 கிலோமீட்டர் வடமேற்கே உள்ளது. சோமியானியின் கடற்கரை அரபிக் கடலின் வடக்குப் பகுதியாகும். கராச்சியிலுள்ள கடற்கரைகளுள் மிகவும் பிரபலமான கடற்கரை சோமியானி கடற்கரையாகும். பாக்கித்தானின் லாசுபெலா மாவட்ட்த்திலுள்ள அப் தாலுக்காவின் ஒன்றியக் குழுவாக சோமியானி நகரமும் செயல்படுகிறது [1]. நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக சோமியானி அறியப்படுகிறது. சோமியானி மாவட்டத்தில் சோமியானி விண்வெளித் துறைமுகமும், ஒரு விண்வெளி மையமும் அமைந்துள்ளன. பாக்கித்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு ஆணையம் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது [2]. உலகின் நீளமான நேர் நீர்வழியின் ஒரு முனையில் சோமியானி அமைந்துள்ளது. 32.090 கி.மீ. நீளமுள்ள இப்பாதை உருசியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் முடிவடைகிறது [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Tehsils & Unions in the District of Lasbella - Government of Pakistan பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today
- ↑ http://dailycapital.pk/pakistan-to-install-five-more-lng-terminals/ பரணிடப்பட்டது 2017-02-25 at the வந்தவழி இயந்திரம் Pakistan to install five more LNG terminals]
- ↑ MIT Technology Review – Computer scientists have found the longest straight line you could sail without hitting land