சோராப் பைரோஜ்சா கோத்ரேஜ்
சோலி என்று பிரபலமாக அறியப்பட்ட சோரப் பைரோஜ்சா கோத்ரேஜ் (Sohrab Pirojsha Godrej ) (பிறப்பு:1912 சூன் 3 - இறப்பு: 2000 மே 22), இவர் ஒரு இந்திய தொழிலதிபரும், தொழில்முனைவோரும் மற்றும் கோத்ரேஜ் குழுமத்தின் தலைவராக இருந்தார். [1] இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அசையாச் சொத்து வணிகம், நுகர்வோர் தயாரிப்புகள், தொழில்துறை பொறியியல், உபகரணங்கள், தளவாடங்கள், பாதுகாப்பு மற்றும் விவசாய பொருட்கள் போன்றவைகள். [2]
சோரப் கோத்ரேஜ் | |
---|---|
பிறப்பு | மும்பை, மகாராட்டிரம், இந்தியா | 3 சூன் 1912
இறப்பு | 22 மே 2000 இலண்டன், ஐக்கிய இராச்சியம் | (அகவை 87)
மற்ற பெயர்கள் | சோலி |
பணி | வணிகர் தொழில்முனைவோர் |
அறியப்படுவது | கோத்ரேஜ் குழுமம் |
பெற்றோர் | பைரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ் சூனாபாய் |
விருதுகள் | பத்ம பூசண் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள மும்பையில் கோத்ரேஜ் குழுமத்தின் [3] இணை நிறுவனர் பிரோச்சா பைரோஜ்சா கோத்ரேஜுக்கு 1912 சூன் 3 அன்று பிறந்தார். குயின் மேரி பள்ளி மற்றும் செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இருந்து அறிவியலில் பட்டமும் பெற்றார். [1] 1972 இல் இவரது தந்தை இறந்த பிறகு, இவர் குழுமத்தின் தலைவரானார். [4]
தொழில்
தொகுகோத்ரேஜ் குழுமத்தின் தலைவராக இருந்ததோடு, விஞ்ஞான மேலாண்மை, சுற்றுச்சூழல், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு, கல்வி, சமூக நலன், சர்வதேச விவகாரங்கள், தொல்லியல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு உள்ளிட்ட பலவிதமான நலன்களை திரு. கோத்ரேஜ் கொண்டிருந்தார்.
இவர் இந்தியாவின் சர்வதேச வர்த்தக சபையின் கடந்த காலத் தலைவராக இருந்தார்; இந்தியாவில் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபை; இந்தோ-பிரஞ்சு வர்த்தக சபை & தொழில்துறை மற்றும் இந்தோ-பெல்ஜிய வர்த்தக சபை & தொழில்துறை ஆகியவை. இவர் 1983 இல் மும்பையின் நகரத்தந்தையாக பணியாற்றினார். [5] மேலும் இந்தோ-பிரெஞ்சு தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். [6]
கோத்ரேஜுக்கு அப்பால்
தொகுஇயற்கை, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியளித்த பல்வேறு அமைப்புகளுடன் சோராப் கோத்ரேஜ் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் துணைத் தலைவராகவும், மரங்களின் தேசிய சங்கத்தின் தலைவராகவும், இந்திய குடும்பக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் புரவலராகவும், இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் ஆளும் குழு உறுப்பினராகவும் இருந்தார். [6]
விருதுகள்
தொகுஇந்திய வணிகத்தில் இவர் செய்த பங்களிப்பிற்காக 1999 ஆம் ஆண்டில் இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கியது. [7]
இவருக்கு எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப் வெள்ளை பெலிகன் விருது என்ற விருதினை வழங்கினார். [6] [8] [9]
இவருக்கு 1991 இல் இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்காரம் வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவரது வாழ்க்கை வரலாறு அவரது நீண்டகால நண்பரான பி.கே.கராஞ்சியாவால் இணைந்து எழுதப்பட்ட அப்டண்ட் லிவிங், ரெஸ்ட்லெஸ் ஸ்டிரைவிங் எனும் இவரது வாழ்க்கை வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சமுதாய பொறுப்பு
தொகுகோத்ரேஜ் தங்கள் ஊழியர்களுக்காக பள்ளிகள், மருந்தகங்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தை கட்டிய ஒரு மனிதநேயப் பிரிவைக் கொண்டுள்ளார். கோத்ரேஜ் நிறுவிய அறக்கட்டளைகள் கல்வி, சுகாதாரம் மற்றும் நலிந்தவர்களின் மேம்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்கின்றன. கோத்ரேஜ் இந்தியாவில் உலக வனவிலங்கு நிதியத்தின் ஆதரவாளரும் ஆவார். இது மும்பையின் விக்ரோலி நகரியத்தில் ஒரு பசுமை வணிக வளாகத்தை உருவாக்கியுள்ளது. இதில் 200 ஏக்கர் சதுப்புநில காடு மற்றும் நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கான பள்ளி ஆகியவை அடங்கும்.
கோத்ரேஜ் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகளில் இருபத்தைந்து சதவீதம் பங்குகளில் பைரோஜ்சா கோத்ரேஜ் அறக்கட்டளை, சூனபாய் பைரோஜ்சா கோத்ரேஜ் அறக்கட்டளை மற்றும் கோத்ரேஜ் நினைவு அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Giant who gave Godrej its global presence". ReDiff. 24 May 2000. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "Godrej Group profile". Godrej Group. 2016. Archived from the original on 25 February 2016. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "S.P. Godrej hated chalta hai attitude". The Tribune. 21 May 2000. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "Sohrab Godrej on Godrej Archives". Godrej Archives. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "Raj Bhavan Archives (A Class Files - Permanent Record)" (PDF). Rajbhavan Maharashtra. 2018-05-29. Archived from the original (PDF) on 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
- ↑ 6.0 6.1 6.2 "The Hindu : S.P. Godrej dead". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ "The Tribune, Chandigarh, India - Business". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
- ↑ P, Haresh; ya (24 June 2000). "Sohrab Godrej". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
வெளி இணைப்புகள்
தொகு- B. K. Karanjia (July 2002). "He Just Couldn't Let Things Be!". Change 2 (4). http://www.godrej.com/godrej/GodrejandBoyce/pdf/2002/julaug/cover.htm. பார்த்த நாள்: 2020-01-14.