சோரா சிங்
சோரா சிங் (Zora Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1928 ஆம் ஆண்டு சூன் மாதம் 06 ஆம் தேதியன்று லூதியானா மாவட்டத்தில் உள்ள தல்வாண்டி குர்த் கிராமத்தில் தனோவா சாதியைச் சேர்ந்த ஜாட் குடும்பத்தில் இவர் பிறந்தார். 1960 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரத்தில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆண்கள் 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் 1:43:19.8 என்ற நேரத்தில் கடந்து 20 ஆவது இடத்தைப் பிடித்தார். இதே ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோமீட்டர் நடைப்போட்டியில் 4-37:44.6 என்ற நேரத்தில் கடந்து எட்டாவது இடத்தைப் பிடித்தார். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியன்று சோரா சிங் காலமானார்.[1][2][3][4]
தனித் தகவல்கள் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறந்த நாள் | சூன் 6, 1928 |
இறந்த நாள் | 9 அக்டோபர் 2005 | (அகவை 77)
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகள விளையாட்டு |
நிகழ்வு(கள்) | நடைப்போட்டி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Olympedia – 50 kilometres Race Walk, Men", www.olympedia.org, பார்க்கப்பட்ட நாள் 2023-12-26
- ↑ "Punjab's falling standard in athletics". punjabnewsexpress.com.
- ↑ "Zora Singh Bio, Stats, and Results". Olympics at Sports-Reference.com. Archived from the original on 2020-04-18.
- ↑ "Zora SINGH - Olympic Athletics - India". olympic.org. 12 June 2016.