சோற்றுக் கற்றாழை மரம்

தாவர இனம்

சோற்றுக் கற்றாழை மரம் (tree aloe, Aloidendron barberae, முன்னதாக, Aloe bainesii, Aloe barberae), என்பது அலோய்டென்டிரான் இனத்தில், சாற்றுத்தாவர வகையைச் சேர்ந்ததாகும். இத்தாவரம் தென்னாப்பிரிக்காவைத் (மொசாம்பிக்க்கிற்கு வடக்கே) தாயகமாகக் கொண்டது. அங்கு, 60 அடி (18 மீட்டர்) உயரமும், 36 அங்குல (0.91மீட்டர்) விட்டமுள்ள அடித்தண்டும் கொண்டதாகவும் மெதுவாக வளரக்கூடியதுமானதுமாகும் . இம்மரமானது அலங்காரத் தாவரமாகக் பயன்படுத்தப்படுகிறது. இதன் குழலமைப்பு மலர்கள் ரோசா இளங்சிவப்பு (நுனியில்-பச்சை) நிறத்திலிருக்கும்; குளிர்காலத்தில் பூக்கும். இயற்கைச் சூழலில் இதன் மகரந்தச் சேர்க்கை, தேன்சிட்டுகளால் நடைபெறுகிறது.[1]

சோற்றுக் கற்றாழை மரம்
ரோசா வண்ணப் பூக்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. Aloe barberae by Kirstenbosch National Botanical Garden
  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோற்றுக்_கற்றாழை_மரம்&oldid=4034929" இலிருந்து மீள்விக்கப்பட்டது