சோலாங் பள்ளத்தாக்கு

சோலாங் பள்ளத்தாக்கு (Solang Valley) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குலு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான குலுவுக்கு வடக்கே 14 கிலோமீட்டர் தொலைவில், லே-மணாலி நெடுஞ்சாலையில், ரோதங் கணவாய்க்கு செல்லும் வழியில், இமயமலையில் 2,560 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது இந்தியாவின் புகழ்பெற்ற கோடைக்கால மலைவழிடங்களில் ஒன்றாகும். மேலும் இது மலையேற்றம், பாரசூட், பனிச்சறுக்கு மற்றும் பெரிய பலூன்களில் உள்ளே அமர்ந்து மலைச்சரிவுகளில் உருளும் சோர்பிங் எனும் விளையாட்டுகளுக்குப்[1] புகழ்பெற்றது. மேலும் தங்கும் விடுதிகள் உள்ளது. புகழ்பெற்ற சோலாங் தேயிலை இங்கு விளைகிறது. ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு வான் வழியாகச் செல்வதற்கு ரோப் வே உள்ளது.[2]கோடைகாலத்தில் இப்பள்ளத்தாக்கில் பனி உருகி ஓடைகளாக பாயும். மேலும் இங்கு கனடா மக்கள் தங்கள் நாட்டில் தயாரித்த மலையேற்றம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கான பொருட்களை விற்பதற்கு ஒரு பல்பொருள் அங்காடி வைத்துள்ளனர்.

படக்காட்சிகள்

தொகு

தட்பவெப்பம்

தொகு
 
மணாலியில் பனிப்பொழிவுக் காட்சி

சோலாங் பள்ளத்தாக்கின் குளிர்கால வெப்பம் பூஜ்ஜியம் −12 °C (10 °F) முதல் 25 °C (77 °F) வரை இருக்கும். கோடைக்கால வெப்பம் 5 °C (41 °F) முதல் 25 °C (77 °F) வரை இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், சோலாங் பள்ளத்தாக்கின் தட்பவெப்பம், (2018–2019)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 6.5
(43.7)
6.0
(42.8)
17.0
(62.6)
21.0
(69.8)
25.7
(78.3)
25.8
(78.4)
25.7
(78.3)
24.2
(75.6)
22.1
(71.8)
17.3
(63.1)
12.6
(54.7)
8.8
(47.8)
25.8
(78.4)
உயர் சராசரி °C (°F) 1.8
(35.2)
1.8
(35.2)
8.2
(46.8)
17.0
(62.6)
18.0
(64.4)
22
(72)
21.3
(70.3)
20.0
(68)
17.5
(63.5)
13.0
(55.4)
7.8
(46)
5.0
(41)
12.78
(55.01)
தினசரி சராசரி °C (°F) -2.0
(28.4)
-1.5
(29.3)
2.7
(36.9)
10.3
(50.5)
11.8
(53.2)
15.3
(59.5)
16.3
(61.3)
15.6
(60.1)
13.3
(55.9)
7.9
(46.2)
3.7
(38.7)
0.9
(33.6)
7.86
(46.15)
தாழ் சராசரி °C (°F) -5.8
(21.6)
-4.8
(23.4)
-2.8
(27)
3.7
(38.7)
5.6
(42.1)
8.6
(47.5)
11.3
(52.3)
11.3
(52.3)
9.1
(48.4)
2.9
(37.2)
-0.3
(31.5)
-3.2
(26.2)
2.97
(37.34)
பதியப்பட்ட தாழ் °C (°F) -12.8
(9)
-9.0
(15.8)
-6.6
(20.1)
-0.8
(30.6)
3.0
(37.4)
5.5
(41.9)
9.0
(48.2)
8.2
(46.8)
6.2
(43.2)
0.0
(32)
-4.6
(23.7)
-10.0
(14)
−12.8
(9)
பொழிவு mm (inches) 143
(5.63)
130
(5.12)
191
(7.52)
137
(5.39)
121
(4.76)
80
(3.15)
266
(10.47)
239
(9.41)
152
(5.98)
71
(2.8)
31
(1.22)
66
(2.6)
1,627
(64.06)
ஆதாரம்: SASE ( Not enough data to show all time record high and low temperatures)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Zorbing
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலாங்_பள்ளத்தாக்கு&oldid=3777000" இலிருந்து மீள்விக்கப்பட்டது