சோலோகா (Solokha) (Солоха) உக்ரைன் நாட்டின் சப்போரியா மாகாணத்தில் உள்ள கமியாங்கா-டினிப்ரோவ்ஸ்கா நகரத்த்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், தினேப்பர் ஆற்றின் இடது கரையில் அமைந்த தொல்லியல் புதைமேடு ஆகும். கிமு நான்காம் நூற்றாண்டு காலத்திய இத்தொல்லியல் மேடு 19 மீட்டர் உயரமும், 100 மீட்டர் விட்டமும் கொண்டது.

குதிரை வீரர்களின் உருவம் பொறித்த சிதியர்களின் தங்கச் சீப்பு, ஆண்டு கிமு 4-ஆம் நூற்றாண்டு, உக்ரைன்

இப்புதைமேட்டின் நடுவில் சிதிய அரச குடும்பத்தவர்களின் கல்லறைகள் கொண்டது. காலப்போக்கில் பழமையான இத்தொல்லியல் மேட்டின் தொல்பொருட்கள் களவாடப்பட்டது. இருப்பினும் இப்புதைமேட்டில் சிதிய பெண் ஆட்சியாளர் மற்றும் இரண்டு குதிரைகளின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

1912-1913-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வில் மற்றொரு புதைகுழியில் தங்கத் தகடுகளால் மூடப்பட்ட ஆயுதங்கள் தரித்த ஆண் ஆட்சியாளரின் உடல் சிதிலங்கள், ஆட்சியாளரின் பணியாள் உடல் மற்றும் ஐந்து குதிரைகளின் உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வெண்கலத்தால் ஆன தலைக்கவசம், தங்கத்தாலான உறையுடன் கூடிய வாள், வெண்கல நுனியுடன் கூடிய 80 வெள்ளி ஈட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைகுழியில் மூன்று போர் வீரர்களின் உருவங்களுடன் கூடிய தங்கத்தால் ஆன சீப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கச் சீப்பு சிதியர்களின் கலை நயத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  • Boris Piotrovsky, et al. "Excavations and Discoveries in Scythian Lands", in From the Lands of the Scythians: Ancient Treasures from the Museums of the U.S.S.R., 3000 B.C.–100 B.C. The Metropolitan Museum of Art Bulletin, v. 32, no. 5 (1974), available online as a series of PDFs(bottom of the page).

உசாத்துணை தொகு

  • Schiltz, Véronique, Kelermès et Solokha, Les Dossiers d'archéologie ISSN 1141-7137, no 259 (2000–2001), 20–23.
  • Алексеев А.Ю. К идентификации погребений кургана Солоха //Тез. докл. междунар. конф. «Проблемы скифо-сарматской археологии Северного Причерноморья», посвящ. 95-летию со дня рождения профессора Б.Н.Гракова. – Запорожье, 1994. – II.
  • Алексеев А.Ю. Гребень из кургана Солоха в контексте династической истории Скифии //Эрмитажные чтения памяти Б.Б.Пиотровского. Тез. докл. – Санкт-Петербург, 1996.
  • Кузнецов C. В. Щиты на золотом гребне из кургана «Солоха» //Проблемы ски-фо-сарматской археологии Северного Причерноморья (К 100-летию Б.Н.Гракова). – Запорожье, 1999.Мозолевський Б.М. Солоха // Мозолевський Б.М. Скіфський степ. – Київ, 1983. - С. 83-94
  • Манцевич А.П. Гребень и фиала из кургана Солоха //СА. – 1951. – XIII.
  • Манцевич А.П. Золотой гребень из кургана Солоха. – Ленинград: Изд-во ГЭ, 1962.
  • Манцевич А.П. Горит из кургана Солоха //ТГЭ. – 1962. – Т.3.
  • Манцевич А.П. Курган Солоха. Публикация одной коллекции. – Ленинград:Искусство, 1987.
  • Половцова С. Объяснение изображений на драгоценных вещах из Солохи проф. Свороносом //ИАК. – 1918. – Вып. 65.
  • Русяева М.В. Золотой гребень из кургана Солоха //VI чтения памяти профессора В.Д.Блаватского. К 100-летию со дня рождения. Тезисы докладов 21-22 мая 1999 г. – М., 1999. – С.96-97.
  • Русяева М.В. Сцена охоты на чаше из кургана Солоха // V Боспорские чтения. Боспор Киммерийский и варварский мир в период античности и средневековья. Этнические процессы. – Керчь, 2004. – С. 301–306.
  • Русяева М.В. Серебряная чаша из кургана Солоха // Боспорские исследования. – Вып. IX. – Керчь, 2005. – C. 112–126.
  • Фармаковский Б.В. Горит из кургана Солоха //ИРАИМК. – 1922. – II.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலோகா&oldid=3842760" இலிருந்து மீள்விக்கப்பட்டது