சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம்

சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய கலைஞர்களின் கூட்டுக்குடியிருப்பு தன்னாட்சிப் பகுதியாகும்(Commune). இது சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது. 1966-ல் நிறுவப்பட்ட இக்குடியிருப்பின் கலைஞர்கள், சென்னை கலை இயக்கத்தின்(Madras Movement of Art) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்கள். மேலும், ஓவியர்கள், சிற்பக் கலைஞர்கள் போன்ற கலைஞர்கள் தற்போதும் இந்தக் குடியிருப்புப் பகுதியிலேயே தங்கி தங்கள் படைப்புகளை இங்கு காட்சிக்கும் வைத்திருக்கிறார்கள். இந்தக் குழுமம் கே. சி. எஸ். பணிக்கரால் நிறுவப்பட்டது.[1][2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "கலைவெளிப் பயணம் - 4: கலை ஆன்மிகத்தில் சுடரும் ஓவியர்". 2024-05-05. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. Stephen Kinzer (29 January 1998). "In India, Pioneers of Modernism Savor Their Success". The New York Times.
  3. Cholamandal Artists' Village
  4. "Celebrate the oeuvre". Business Line. 2 October 2000.

வெளி இணைப்புகள்

தொகு

சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்