சோழர் கால சாலைகள்
சோழர் காலத்தில் சாலைகள் 3 வகைப்பட்டன. அவை,
- பெருந்தெருக்கள்
- வதிகள்
- பெருவழிகள்
பெருந்தெருக்கள்
தொகுசோழர் காலத்தில் நகரத்து நெடிய வீதிகள் பெருந்தெருக்கள் என்று அழைக்கப்பட்டன.[1]
வதிகள்
தொகுசிற்றூர்களை இணைக்கும் சிறுவழிகள் வதிகள் என்று அழைக்கப்பட்டன.[2]
பெருவழிகள்
தொகுநகரங்களை இணைக்கும் சாலைகள் பெருவழிகள் எனப்பட்டன.[3] அதில் தஞ்சை நகர பெருவழிகள் நான்கு அவை,
- வடுக வழி (வடக்கில் உள்ள வடுக நாடுகளுக்கு சென்றவை)
- தடிகை வழி (தடிகைப்பாடிக்கு சென்றது)
- மேலைப் பெருவழி (மேற்கு நோக்கிச் சென்றது)
- கொங்கு வழி (கொங்கு நாட்டை நோக்கிச் சென்றது)
மேலுள்ள 4 சாலைகள் சோழப் பேரரசின் தேசிய நெடுஞ்சாலைகளாக இருந்தன.[4]
- குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறும் பெருவழிகள்
- இராச இராசன் பெருவழி
- இராசேந்திரன் பெருவழி
- குலோத்துங்கன் பெருவழி
- விளாங்குடையான் பெருவழி
- கூழையானை போன பெருவழி
- மேற்குநோக்கிப் போன பெருவழி[5]
போன்ற பெருவழிகள் கங்கை கொண்ட சோழபுரத்தை நோக்கி அமைந்திருந்தன.[6]
- மற்ற பெருவழிகள்
- இராசராசபுர பெருவழி
- அரங்கம் நோக்கிய பெருவழி
- தஞ்சைப் பெருவழி
- பட்டினப் பெருவழி
தடிவழி வாரியம்
தொகுமேற்கூறிய சாலைகளை உபயோகிப்பவர்களுக்கு தடிவழி வாரியம் மூலம் வரிவிதிக்கப்பட்டது.[7] எந்தெந்த ஊர்களின் வழியாக பெருவழிகள் சென்றனவோ அந்தந்த ஊர்களின் தடிவழி வாரியம் மூலம் பராமரிப்பு வரிகள் பெறப்பட்டன.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள்"
- ↑ பிற்கால சோழர் சரித்திரம்,3ஆம் பகுதி சதாசிவ பண்டாரத்தார், ப-107
- ↑ இந்திய வரலாறு, சத்தியநாதய்யர், முதல்பாகம், ப-425
- ↑ "envolution of hindu administrative institutions in south india" S.Krishnaswamy Iyengar, page 277-288
- ↑ இராசேந்திர சோழன் கல்வெட்டு
- ↑ குலோத்துங்க சோழன் கல்வெட்டு
- ↑ திருப்பாற்கடல் கல்வெட்டு, காவேரிப்பாக்கம் ஊர்மன்றம்
- ↑ "envolution of hindu administrative institutions in south india" S.Krishnaswamy Iyengar, page-279