சோழர் கால மருத்துவமனைகள்
சோழர் கால மருத்துவமனைகள் “ஆதுலர் சாலைகள்” என்ற பெயரால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில், வீர இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கீழ் “வீரசோழன் ஆதுலசாலை” என்ற மருத்துவமனை செயல்பட்டுள்ளது. அங்கு மருத்துவ விடுதியும் இருந்துள்ளது.
குந்தவை மருத்துவமனை
தொகுமுதலாம்இராசராசனின் தமக்கையார் குந்தவை பிராட்டியார் தனது தந்தை சுந்தரசோழனின் பெயரால் “சுந்தரசோழ விண்ணகர் ஆதுலார் சாலை” என்ற மருத்துவமனையை ஏற்படுத்தி அதனை நிர்வகிக்க நிலக்கொடையும் அளித்துள்ளாள்.
இலவச மருத்துவமனை
தொகுவிக்கிரம சோழனின் ஆட்சி காலத்தில் திருபுகழுரில் “தேவருடையான் மதுக்கினியான் ஆன விராடராசன்” என்பவன் முடிகொண்ட சோழ பேராற்றின் வடகரையில் ஆதுலார்சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் அனாதைகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனாதைகளுக்கு சிகிச்சையுடன் இலவசமாக உணவும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென்று ஆதுலார் சாலைக்கருகில் மடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கான நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது. சோழர் கால மருத்துவக் கல்லூரிகளில் விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தில் திருவாடுதுறையில் மருத்துவக் கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம், பெருவல்லூரில் மருத்துவக்கல்லூரி ஒன்று செயல்பட்டுள்ளது. இக்கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு சரகசம்ஹிதை, அஷ்டாங்க கிருதம் போன்ற மருத்துவ நூல்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதியும் (மடம்) இருந்துள்ளது. இவ்விடுதியில் மருத்துவ மாணவர்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளது. அதற்காக நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது.
மருந்து வகைகள்
தொகுபிற்கால சோழர்ஆட்சி காலத்தில் ஆதுலர் சாலைகளில் (மருத்துவமனை) நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. வீரசோழன் ஆதுலார் சாலையில் ஓர் ஆண்டிற்கு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
மருந்துகள் இருப்பு விவரம்
தொகுமருந்து அளவு
- பிராமண்யம்-கடும்பு .. 1 படி
- வாசா-காப்தகி .. 2 படி
- கோ-முத்ரா-ஹதஹி .. -
- தஸ-மூலா-ஹதஹி .. 1 படி
- பலாடக-ஹதஹி .. 1 படி
- கத்தீரம் .. 1 படி
- பலாகேரண்ட தைலம் .. 1 படி
- பஞ்சாக தைலம் .. 1 தூணி
- லகணாதி ஏரண்ட தைலம் .. 1 தூணி
- உத்தம சரணாதி தைலம் .. 1 தூணி
- பில்லாதி கிருதம் .. 1 தூணி
- மண்டூகர வதகம் .. 1 பதக்கு
- திராவட்டி .. 2,000
- விமலை .. தாழி
- சுனேத்திர .. 2,000
- தம்ராதி .. 2,000
- வஜ்ர கல்பம் .. தூணி-பதக்கு
- கல்யாண லவணம் .. தூணி-பதக்கு
மேற்கோள்
தொகு- 'இராசராசன் துணுக்குகள் நூறு' வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை பக்கம் எண்: 23,24,25.