சோவேட்டோ எழுச்சி

சோவேட்டோ எழுச்சி (Soweto uprising) என்பது தென்னாப்பிரிக்காவில் 1976 சூன் 16 காலையில் கறுப்பினப் பள்ளி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.[1]

சோவேட்டோ எழுச்சி
இடம்சோவேட்டோ, தென்னாப்பிரிக்கா
நாள்16 சூன் 1976; 46 ஆண்டுகள் முன்னர் (1976-06-16)
இறப்பு(கள்)176 (700 வரை என மதிப்பிடப்படுகிறது)
காயமடைந்தோர்4,000

ஆபிரிக்கான மொழியை உள்ளூர்ப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டதை எதிர்க்கும் பொருட்டு, சோவேட்டோ நகரின் பல பாடசாலைகளில் படிக்கும் கறுப்பின மாணவர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.[2] 20,000 மாணவர்கள் வரை இப்போராட்டங்களில் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டங்களை அடக்க காவல்துறையினர் வரவழைக்கப்பட்டன்ர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 700 பேர் வரை இறந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனாலும், அதிகாரபூர்வமாக 176 மாணவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[3][4][5] இந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், சூன் 16 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் "இளைஞர் நாள்" என நினைவுகூரப்படுகிறது.[6]

மேற்கோள்கள்தொகு

  1. "The birth and death of apartheid". 17 June 2002 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Youth Struggle". South African History Online.
  3. Boddy-Evans, Alistair. "16 June 1976 Student Uprising in Soweto". africanhistory.about.com. 1 மார்ச் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 டிசம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. Harrison, David (1987). The White Tribe of Africa. 
  5. (Les Payne of Newsday said at least 850 murders were documented) Elsabe Brink; Gandhi Malungane; Steve Lebelo; Dumisani Ntshangase; Sue Krige, Soweto 16 June 1976, 2001, 9
  6. "16 June 1976: 'This is our day'". Brand South Africa. 14 July 2015. 13 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 டிசம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

  வெளி ஒலியூடகங்கள்
  Guardian Unlimited audio recording of Antoinette Sithole on the Soweto uprising
  வெளி ஒளிதங்கள்
  Soweto Uprising (2007) at the இணைய ஆவணகம்
  BBC video of the Soweto uprisings
  TIME 100 Photos: Soweto Uprising: The Story Behind Sam Nzima's Photograph
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவேட்டோ_எழுச்சி&oldid=3637095" இருந்து மீள்விக்கப்பட்டது