சோ. செல்வநாயகம்

இலங்கை தமிழ் கல்வியாளர்

பேராசிரியர் சோமசுந்தரம் செல்வநாயகம் (28 மே 1932 – 23 மே 1979) என்பவர் இலங்கைத் தமிழ் புவியியலாளர், கல்வியாளர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையின் தலைவர் ஆவார்.

பேராசிரியர்
சோ. செல்வநாயகம்
FRGS
பிறப்பு(1932-05-28)28 மே 1932
இறப்பு23 மே 1979(1979-05-23) (அகவை 46)
படித்த கல்வி நிறுவனங்கள்இலங்கைப் பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளியல் பள்ளி
பணிகல்வியாளர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

செல்வநாயகம் 1932. மே. 28 அன்று பிறந்தார். [1] யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கொழும்பு சாகிரா கல்லூரியிலும் கல்வி பயின்றார். [1] [2] இவர் 1953 இல் பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், 1957 இல் புவியியலில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றார். [2]

தொழில்

தொகு

படிப்பை முடித்த செல்வநாயகம் அரச கரும மொழிகள் திணைக்களத்தில் (ஆட்சி மொழிகள் துறை) சிறிது காலம் பணியாற்றினார். [1] பின்னர் அவர் 1951 இல் பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்தார். [2] இவர் 1961 அக்டோபரில் இலண்டன் பொருளியல் பள்ளியில் (எல்.எஸ்.இ) முதுகலை படிப்பிற்காக சேர்ந்து எம்ஏ பட்டம் பெற்றார். [1] [2] இவர் தனது ஆராய்ச்சியைத் தொடர 1970 இல் எல்.எஸ்.இக்குத் திரும்பினார், 1971 ஆகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1] [2]

செல்வநாயகம் அகமது பெல்லோ பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் மூத்த விரிவுரையாளராக 1974 இல் சேர்ந்தார். [1] இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (யாழ்ப்பாண வளாகம்) புவியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் 1977 ஆகத்தில் அகமது பெல்லோவை விட்டு வெளியேறினார். [1]

செல்வநாயகம் ராயல் ஜியோகிராஃபிக்கல் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தார் . [1] அவர் மே 1979 23 அன்று இறந்தார் [1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 The Glowing Tributes Paid to Late Prof. S. Selvanayagam.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Subramaniam, V. (22 May 2005). "A beacon to family, friends". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/050522/plus/appreciation.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._செல்வநாயகம்&oldid=3329457" இலிருந்து மீள்விக்கப்பட்டது