சோ. நடராசன்

சோ. நடராசன் (நவாலி, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர் மேலும் நவாலியூர் சோ. இளமுருகனாரின் சகோதரனும் ஆவார்..

எழுதிய நூல்கள்தொகு

தளத்தில்
சோ. நடராசன் எழுதிய
நூல்கள் உள்ளன.
 • இலங்கையின் பூர்வ சரித்திரம் (மொழிபெயர்ப்பு)
 • உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
 • கீதாஞ்சலி (குமரன் பதிப்பகம் கொழும்பு: 1950, 2008, மொழிபெயர்ப்பு)[2]
 • மேகதூதம்
 • சித்தார்த்தர்
 • பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு)[2]
 • புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு)[3]
 • செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971)[4]
 • விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966)

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (நூல்) - தம்பிஐயா தேவதாஸ், தி. இந்து - எஸ்.எஸ். உமா காந்தன் - May 17, 2016
 2. 2.0 2.1 "SEU Library Network". பார்த்த நாள் 26 மே 2016.
 3. "மார்க்க பகுப்பாய்வு - பௌத்தமும் தமிழும்! bautham.net". பார்த்த நாள் 26 மே 2016.
 4. "Cey mati (Book, 1971) [WorldCat.org]". பார்த்த நாள் 26 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._நடராசன்&oldid=2716286" இருந்து மீள்விக்கப்பட்டது