சௌகன் சமவெளி

சௌகன் (Chaugan) என்பது சமவெளிகளுக்காக இமாச்சலப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும் . இமாச்சல பிரதேசத்தின் சௌகன் சமவெளி சம்பா மாவட்டத்தில் சுஜன்பூரிலும் ஜெய்சிங்பூரிலும் அமைந்துள்ளது .

ஜெய்சிங்பூர் சௌகன் சமவெளி
ஜெய்சிங்பூர் சௌகன் சமவெளி

சௌகன்-அமைவிடம் தொகு

சுஜன்பூர் திகிராவில் அமைந்துள்ள சௌகன் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மிகப்பெரிய பகுதியாகும். சுஜன்பூர் திகிராவின் அரசராக இருந்த ராஜா சஞ்சார் சாத் என்பவரின் காலத்தில் அது இருந்தது. சௌகனிலிருந்து சுமார் 1/2 கி.மீ தூரத்தில் சஞ்சார் சந்த் கோட்டை அமைந்துள்ளது.

சௌகன் (விளையாட்டு) தொகு

மத்திய கிழக்கில், சௌகன் என்பது பந்து, கோல்ஃப், போலோ உள்ள ஒரு விளையாட்டு ஆகும். இது ஒரு பந்து, குதிரைகள், மற்றும் குச்சிகளை (கில்லி) உள்ளடக்கியது. இந்த சொல்லுக்கு "நான்கு மூலைகள்" என்றும் பொருள் கொள்ளலாம். இப்பொருளில் இது விளையாட்டுத் திடலைக் குறிப்பிடும். முகமது கோரியின் தில்லிச் சுல்தானகத்தின் பொதுப்பொறுப்பாளராக இருந்த குத் -புதின் -ஐபக் என்பவர் சௌகன் விளையாடுகையில் அவரது குதிரையிலிருந்து வீழ்ந்ததன் விளைவாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகன்_சமவெளி&oldid=3739157" இலிருந்து மீள்விக்கப்பட்டது