சௌகாய்ஜம் தனில் சிங்

மணிபுரி நடனக் கலைஞர்

சௌகாய்ஜம் தனில் சிங் (பிறப்பு:1 பிப்ரவாி 1946) இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய நடனக்கலைஞர் ஆவார். இவா் பாரம்பரிய நடின வடிவங்களான மணிப்புாி மற்றும் நாட்டா சங்கீா்த்தனா நடனத்தில் புகழ் பெற்று விளங்குகிறார்.[1]

சௌகாய்ஜம் தனில் சிங்
பிறப்புமணிப்பூர், இந்தியா
மற்ற பெயர்கள்பாரம்பரிய நடனக் கலைஞர்
அறியப்படுவதுமணிப்புரி, நாட சங்கீர்த்தனா
பெற்றோர்எஸ். சேர் சிங்
விருதுகள்பத்மசிறீ
மணிபூர் மாநில கலா அகாதமி விருது
சங்கீத நாடக அகாதமி விருது
வைத்ய ரத்னா விருது,

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் நடனப்பயிற்சி தொகு

வட கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் பிறந்த சௌகாய்ஜம் தனில் சிங்கின் தந்தை சௌகாய்ஜம் சோ் சிங் ஒரு மணிப்பூரி நடனக் கலைஞர் ஆவார். தாயார் சௌகாய்ஜம் ஓங்பி இபெமல் தேவி. தனது தந்தையிடமிருந்தும், குரு டோம்பி சர்மா, குரு பைக்சந்திர சிங் மற்றும் குரு கொயெரெங் சிங் ஆகியோரிடமிருந்தும் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். [2] பின்னர், மணிப்பூா் மாநிலத் தலைநகர் இம்பாலின் ஜவகர்லால் நேரு மணிப்பூர் நடனக் கலை மன்றத்தில் புகழ்பெற்ற நடனக் கலைஞரும், பத்மசிறீ விருது பெற்றவருமான மைஸ்னம் அமுபி சிங் என்பவாிடம் மணிப்புரி நடனம் மற்றும் நாட்ட சங்கீர்த்தனா ஆகியவற்றில் பட்டயப் படிப்பு மற்றும் முதுகலைப் பட்டயப் படிப்பும பயின்றுள்ளார்.[1]

தொழில் தொகு

தான் பயின்ற ஜவகர்லால் நேரு மணிப்பூர் நடனக் கலை மன்றத்தில் 1976 ஆம் ஆண்டு குருவாகவும் (பங்) 1988 ஆம் ஆண்டில் பதவி உயா்வு பெற்று பிரதம குருவாகவும் பணி அமா்த்தப்பட்டார். 2005 ஆம் ஆண்டு இயக்குநா் பொறுப்பைக் கவனித்த அவா் 2006 ஆம் ஆண்டு சனவாி மாதத்துடன் பணி ஓய்வு பெற்றார்.

எழுத்து மற்றும் வெளியீட்டுப்பணி தொகு

இவா் பாரம்பரிய நடனக்கலை தொடா்பான பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • 1971 ஆம் ஆண்டு மெய்த்தி புங் தஜ்மெல் ஹம்புமாரி
  • 1981 ல் கொம்ஜில்லாா மெய்ட்டி புங்லோன் தஞ்ஜோ
  • 1986 ஆம் ஆண்டு புங்லோன் ரஜ்மில்தரணித்தொய்
  • 1999 ஆம் ஆண்டு நாட்டா சங்கீா்த்தன் ராக் பங்லோன்
  • 2007 ஆம் ஆண்டு ராஷ் ஹம்புமாரி செய்சாக் ஆகிய புத்தகங்கள் இவரால் எழுதி வெளியிடப்பட்டவை ஆகும்.

விருது மற்றும் கௌரவிப்புகள் தொகு

  • 1980 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில கலா அகாடமி விருது
  • 1994 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது, புது தில்லி[3]
  • 1997 ஆம் ஆண்டு பைடா பூசண், மணிபுரி சாகித்ய பார்சிஹாத், இம்பால்
  • 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ[4]
  • 2011 ஆம் ஆண்டு இம்பால் நகரத்தில் வைத்ய ரத்னா, மணிபுரி சாகித்ய பரிசத் விருது

போன்ற பல விருதுகளை இவா் பெற்றுள்ள இவா் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மேடைகளில் மணிப்புரி நடனம் மற்றும் நாட்டா சங்கீர்தனா நடனங்களை ஆடியுள்ளார். மேலும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சின் சக உறுப்பினராக உள்ளார்[5]

மேற்கோள்கள் தொகு

இதனையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகாய்ஜம்_தனில்_சிங்&oldid=3527109" இருந்து மீள்விக்கப்பட்டது