சௌகோனைட்டு

இசுமெக்டைட்டு குழு

சௌகோனைட்டு (Sauconite) என்பது Na0.3Zn3(SiAl)4O10(OH)2·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இசுமெக்டைட்டு களிமண் குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு பைலோசிலிக்கேட்டு கனிமமாக இது கருதப்படுகிறது. மென்மையான மண் போன்ற நீலம் கலந்த வெள்ளை முதல் சிவப்பு-பழுப்பு நிற ஒற்றைச்சரிவச்சுப் படிகங்களாக உருவாகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் மதிப்பு 1 முதல் 2 ஆகவும் மற்றும் ஒப்படர்த்தி அளவு 2.45 ஆகவும் உள்ளது.ஒளியியல் ரீதியாக இது ஓர் ஈரச்சு படிகமாகும். சௌகோனைட்டு கனிமத்தின் ஒளிவிலகல் மதிப்பு nα = 1.550 – 1.580, nβ = 1.590 – 1.620 மற்றும் nγ = 1.590 – 1.620. ஆகும். இது துத்தநாகம் மற்றும் தாமிரப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலங்களில் உள்ள பாறைக் குழிகள், இணைப்புகளில் காணப்படுகிறது. எமிமார்பைட்டு, சுமித்சோனைட்டு, கிரிசோகோலா, கரோணாடைட்டு மற்றும் பல்வேறு இரும்பு ஆக்சைடுகளுடன் இணைந்து காணப்படுகிறது.

சௌகோனைட்டு
Sauconite
சௌகோனைட்டு (செம்பழுப்பு)
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa0.3Zn3(SiAl)4O10(OH)2·4H2O
இனங்காணல்
நிறம்செம்பழுப்பு, பழுப்பு, பழுப்பு மஞ்சள்,
படிக இயல்புகளிமண்; சிறிய மைக்கா தட்டுகளாக
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{001} இல் சரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை1–2
மிளிர்வுமங்கல்
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி2.45
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.550 – 1.580 nβ = 1.590 – 1.620 nγ = 1.590 – 1.620
இரட்டை ஒளிவிலகல்δ = 0.040
நிறப்பிரிகைr > வலிமையானது
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியம் சங்கம் சௌகோனைட்டு கனிமத்தை Sau[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கிழக்கு பென்சில்வேனியாவின் இலேகி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சௌக்கோன் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டதால் கனிமத்திற்கு சௌகோனைட்டு எனப் பெயரிடப்பட்டது. இங்குதான் முதலில் 1875 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mindat
  2. Webmineral data
  3. Handbook of Mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகோனைட்டு&oldid=4145103" இலிருந்து மீள்விக்கப்பட்டது