கரோணாடைட்டு
கரோணாடைட்டு (Coronadite) என்பது Pb(Mn4+6Mn3+2)O16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இது ஐதராக்சைடு வகை கனிமமாகும். ஆலண்டைட்டு கனிமக் குழுவின் வரிசையில் இறுதி ஈய உறுப்பினராக கரோணாடைட்டு இடம்பெற்றுள்ளது. ஆலண்டைட்டு கனிமக் குழுவானது டெக்டோமாங்கனேட்டு குடும்பத்தில் 2 × 2 குகை சுரங்கப்பாதை அமைப்பு கொண்ட கனிமமாகும். தென்மேற்கு அமெரிக்காவை கண்டறிந்த எசுப்பானியாவின் பிரான்சிசுகோ வாசுகுவேசு டி கரோனாடோவின் நினைவாக கனிமத்திற்கு கரோனாடைட்டு என்று பெயரிடப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் சுவீடிய-அமெரிக்க புவியியலாளர் வால்டெமர் லிண்ட்கிரென் என்பவரால் இப்பெயர் உருவாக்கப்பட்டது.[1]
-
2 × 2 குகை சுரங்கப்பாதை அமைப்பு கொண்ட கரோணாடைட்டு கனிமத்தின் பன்முக கட்டமைப்பு. கருப்பு நிற அணுக்கள் ஈயம் அணுவைக் குறிக்கின்றன.
கரோணாடைட்டு coronadite | |
---|---|
கரோணாடைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஐதராக்சைடுகள் |
வேதி வாய்பாடு | Pb(Mn4+6Mn3+2)O16 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 933.55 |
படிக இயல்பு | இழை |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5–5 |
மிளிர்வு | துணை உலோகம் |
கீற்றுவண்ணம் | பழுப்பு கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
அடர்த்தி | 5.44 |
ஒளிவிலகல் எண் | 2.72? |
பலதிசை வண்ணப்படிகமை | பழுப்பு - சாம்பல் |
பொதுவான மாசுகள் | Fe, Al |
அடர் சாம்பல் நிறம் முதல் கருப்பு நிறம் வரையிலான நிறங்களில் கரோணாடைட்டு கனிமம் காணப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் I2/m என்ற இடக்குழுவில் a = 9.938, b = 2.8678, c = 9.834, Z = 1; β = 90.39° V = 280.26 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இக்கனிமம் படிகமாகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கரோனாடைட்டு கனிமத்தை Cor[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Coronadite Mineral Data". webmineral.com.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.