ச. சத்திவேல்

ச. சத்திவேல் அல்லது சக்திவேல் ஐயா (1942 - 2008) என்பவர் இலங்கையில், வன்னி பெருநிலப்பரப்பில், கிளிநொச்சியை சேர்ந்த ஒரு ஈழத்துக் கவிஞரும், நாடக இயக்குநரும், பாடலாசிரியரும், எழுத்தாளரும், தமிழ் மொழிப் பற்றாளரும் ஆவார். தமிழொளி கலாமன்றம் எனும் மன்ற நிறுவுனரும் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகளின், தமிழீழ கலை பண்பாட்டுக் கழகத்தின் உறுப்பினராகவும், புலிகளின் குரல் வானொலியின் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.[1]

ச. சத்திவேல்
S. Saththivel
பிறப்பு1942
இலங்கை
இறப்பு2008
கிளிநொச்சி, இலங்கை
தொழில்கவிஞர், நாடக இயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர்

தமிழொளி கலாமன்றம்

தொகு

ஆரம்பத்தில் "தமிழொளி கலாமன்றம்" எனும் பெயரில் ஒரு மன்றத்தை நிறுவி, அதன் ஒருங்கிணைப்பாளராக பல்வேறு கலை நிகழ்வுகளை கிளிநொச்சி பிரதேசமெங்கும் பல அரங்குகளில் அரங்கேற்றினார். பின்னர் தமிழீழ கலைப் பண்பாட்டு கழகத்தின் ஒரு கிளை நிறுவனமாக இம்மன்றம் மாற்றம் பெற்றது.[1] இவர் பல பாடல்கள் எழுதியுள்ளார். இவர் கதை வசனம் எழுதி, இயக்கிய நாடங்கள் வன்னியில் பல மேடைகளில் அரங்கேற்றப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து வெளியிடப்பட்ட சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. கிளிநொச்சியில் இயங்கிய இவரது மன்றத்தின் பெயரிலேயே இவரது கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கலைநிகழ்ச்சிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இறப்பு

தொகு

2008ம் ஆண்டு இவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இவரது இறப்பின் போது புலிகளின் குரல் வானொலியில், இவர் இயற்றியப் பாடல்களை தொடர்ந்து ஒலிப்பரப்பிக் கௌரவித்தனர்.

சான்றுகோள்கள்

தொகு
  1. 1.0 1.1 தமிழொளி கலாமன்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சத்திவேல்&oldid=2784408" இலிருந்து மீள்விக்கப்பட்டது