ச. சி. சடையப்பர்
ச. சி. சடையப்பர் (21 ஆகத்து 1912 - 24 சூன் 1988) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
ச. சி. சடையப்ப முதலியார் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 ஆகத்து 1912 |
இறப்பு | 24 சூன் 1988 | (அகவை 75)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பட்டம்மாள் |
விடுதலைப் போராட்டம்
தொகு1935 ஆம் ஆண்டு மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டார்.[2] 1940 ஆம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். இதற்காக கைது செய்யப்பட்டு சென்னை மற்றும் திருவள்ளூரில் சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் பங்கேற்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் மற்றும் தஞ்சாவூரில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றார்.[2]
வகித்த பதவிகள்
தொகுசட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1957 | அரக்கோணம் | இதேக |
மரியாதை மற்றும் அங்கீகாரம்
தொகுவேலூரில் 26-1-1973 அன்று நடைபெற்ற குடியரசு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆறுமுகம் அவர்களால் தியாகி ச. ச. சடையப்பமுதலியார் அவர்களுக்கு தாமிரபத்திரம் வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "பனப்பாக்கம் ச.சி. சடையப்ப செங்குந்த முதலியார் ex MLA நூற்றாண்டு விழா மலர்".