ச. சுந்தராம்பாள்
ச. சுந்தராம்பாள் (பிறப்பு:2 பெப்ரவரி 1953) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துத் துறையில் இவர் 'சுதா' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது "பொன்கூண்டு" சிறுகதை தமிழகத்தில் சிறந்த மாதாந்தரச் சிறுகதையாகத் தேர்வு பெற்றுள்ளது.
பரிசுகளும் விருதுகளும்
தொகு- சா. அன்பானந்தன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2002).