ஜகஜித் கவுர்
ஜக்ஜித் கவுர் (Jagjit Kaur[2] 1930 – 15 ஆகத்து 2021) ஓர் இந்திய இந்தி / உருது பாடகராவார். இவர் இசையமைப்பாளர் முகமது சாகுர் கயாமின் துணைவியாவார். இவரது சமகாலத்தவர்களான லதா மங்கேஷ்கர்,ஆஷா போஸ்லே ஆகியோரை விட இவர் படங்களுக்கு குறைவான பாடல்களையேப் பாடியுள்ளார். ஆனாலும் இவரது பாடல்கள் அனைத்தும் மறக்கமுடியாத தலைசிறந்த படைப்புகளாக விவரிக்கப்பட்டுள்ளன.
ஜகஜித் கவுர் | |
---|---|
2016இல் ஜகஜித் கவுர் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | [1] | மார்ச்சு 8, 88
பிறப்பிடம் | பஞ்சாப் (இந்தியா) |
இறப்பு | 15 ஆகத்து 2021 | (அகவை 90–91)
இசை வடிவங்கள் | நாட்டுப்புற பாடல், கசல் (இசை), பின்னணி |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1950 முதல் 1990 வரை |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகவுர் பஞ்சாபிலிருந்து ஒரு பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1954 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் முகமது சாகுர் கயாமை மணந்தார். இது இந்திய திரைப்படத் துறையில் முதல் கலப்பின திருமணங்களில் ஒன்றாகும். இவர்களுக்கு பிரதீப் என்ற மகன் இருந்தார். இவர் 2012 ல் மாரடைப்பால் இறந்துவிட்டார். தங்கள் மகனின் உதவி செய்யும் இயல்பால் ஈர்க்கப்பட்ட இவர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவ "கயாம் ஜக்ஜித் கவுர் கேபிஜி அறக்கட்டளை" என்ற அறக்கட்டளையைத் தொடங்கினர். [3] ஜகஜித் கவுர் 2019 ஆகஸ்ட் 19 அன்று மாரடைப்பால் தனது 92 வயதில் காலமானார். [4]
குறிப்புகள்
தொகு- ↑ "Legendary Music Composer Khayyam speaks about his illustrious career in last interview". 21 August 2019. Event occurs at 22:52. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019 – via YouTube.
- ↑ "Some timeless songs of Jagjit Kaur". songsofyore.com. பார்க்கப்பட்ட நாள் 28 October 2016.
- ↑ "We were inspired by the divine to do what we did: Khayyam & Updates at Daily News & Analysis". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 22 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 August 2019.
- ↑ "Music composer Khayyam passes away". The Indian Express. 19 August 2019. பார்க்கப்பட்ட நாள் 20 August 2019.